ஜெட்டா: NRI Last Ritual Confusion: இந்து முறைப்படி இஸ்லாமியர் ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு ஆச்சரியத்தையும், அதன் பின்னால் உள்ள காரணங்கள் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவில் பணியாற்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதால் நிகழ்ந்த குழப்பம் இது. இறந்த இரண்டு என்.ஆர்.ஐ-களின் உடல்கள், இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. அதில், கேரளாவுக்கு செல்ல வேண்டிய சடலம் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுவிட்டது. ஆனால், கேரளாவை சென்றடைந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சடலம் தகனம் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தவறு, தவிர்க்கப்படக்கூடியது என்பதுதான் இந்த விஷயத்தில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இறந்தவர்களில் ஒருவர் முஸ்லிம், மற்றவர் இந்து. சடலம் மாறியதைக் கண்டறியும் முன்னரே, இஸ்லாமியரின் சடலம், இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.


மேலும் படிக்க | அயோடின் மாத்திரைகள் அணுகுண்டு தாக்குதலை தடுக்குமா? விற்பனை மும்முரம்


கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான ஷாஜி ராஜன் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த 45 வயது ஜாவேத் அகமது இத்ரிஷி ஆவர்கள். இரண்டரை மாதங்களுக்கு முன்பு ராஜன், அல் அஹ்சா நகரில் தற்கொலை செய்து கொண்டார். ஜாவேத் அகமது இத்ரிஷி செப்டம்பர் 25 அன்று தம்மாமில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.


ராஜனின் உடல், சவுதி அரேபியாவின் தம்மாமில் இருந்து கொழும்பு வழியாக கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ஏர் லங்கா விமானம் மூலம்அனுப்பப்பட்டது, ஜாவேத்தின் உடல் இண்டிகோ கேரியர் மூலம் தம்மாமில் இருந்து புது டெல்லி வழியாக வாரணாசிக்கு அனுப்பப்பட்டது.


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யா - கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் ஒரு பகுதி தகர்ந்தது!


இந்த சடலங்கள், தம்மாம் விமான நிலையத்தில் இருந்தே அனுப்பப்பட்டன என்பதும், அடையாளம் காண்பதில் நிகழ்ந்த தவறே இந்தக் குழப்பத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இத்ரிஷியின் குடும்பத்தினர், சடலத்தை பார்த்தது, சடலம் மாறியிருப்பதைத் தெரிந்துக் கொண்டனர். 


பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக தீர விசாரித்து உண்மையைக் கண்டறிந்து, தவறை சரி செய்வதற்குள், ராஜனின் உடலை சரியாக அடையாளம் காண  முடியாத அவரது குடும்பத்தினர், 45 வயது ஜாவேத் அகமது இத்ரிஷியின் உடலுக்கு, தங்கள் வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்துவிட்டனர்.


இந்த செய்தி கேட்பவர்கள் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்துகிறது. சுலபமாக தவிர்க்க முடிந்திருக்கும் தவறு இது என்பது வருத்தத்தை அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ