ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு நல்ல செய்தி. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை எரிபொருள் விலையை லிட்டருக்கு 62 ஃபில்ஸ் வரை ஐக்கிய அரபு அமீரகம்  ஞாயிற்றுக்கிழமை குறைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் விலை நிர்ணயக் குழு, சூப்பர் 98-ஐ 13 சதவிகிதம் குறைத்தது. ஜூலையில் லிட்டருக்கு 4.63 ஆக இருந்த விலை ஆகஸ்டில் 13 சதவீதம் குறைக்கப்பட்டு 4.03 ஆக உள்ளது. ஸ்பெஷல் 95 விலையானது 13.27 சதவீதம் குறைக்கப்பட்டு 3.92 டிஹெம்ஸாக உள்ளது. இது முன்னதாக ஒப்பீட்டு காலத்தில் 4.52 ஆக இருந்தது. இ-லிளஸ் 91 இன் விலை Dh3.84 ஆக உள்ளது. இது முன்னர் Dh4.44 ஆக இருந்தது. இது 13.5 சதவீதம் குறைந்துள்ளது.


இதேபோல், டீசல் விலை ஜூலை மாதத்தில் 4.76 டிஹெச்களாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான டீசல் விலை லிட்டருக்கு 13 சதவீதம் குறைக்கப்பட்டு 4.14 டிஹர்மாக குறைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | UAE: காலவதியாகும் டூரிஸ்ட் விசாவை புதுப்பிக்கும் முறை 


தொடர்ந்து இரண்டு மாத விலை உயர்வைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் கட்டுப்பாடுகளை நீக்கியதை அறிவித்ததில் இருந்து, ஜூலை மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில்  எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.


உலகளவில், பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் இராணுவ நெருக்கடிக்குப் பிறகு, எண்ணெய் விலைகள் பெரும்பாலும் இந்த ஆண்டு பீப்பாய்க்கு $100க்கு மேல் இருந்துள்ளன. ஆனால் மந்தநிலை அச்சம் காரணமாக ஜூலை மாதத்தில் விலைகள் $100க்கு கீழே சரிந்தன. ஜூலை 5 அன்று, எண்ணெய் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. அமெரிக்கப் பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் 0.9 சதவீதம் சுருங்கியது, இது உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மந்தநிலையை நெருங்குகிறது என்ற அச்சத்தை எழுப்புகிறது.


எரிசக்தி சந்தைகள் மற்றும் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் விலையில் எப்படிப்பட்ட மாற்றம் இருக்கும் என்று தெரிந்துகொள்ள இந்த வாரம் நடக்கவுள்ள Opec+ கூட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


"பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த MOpec+ தற்போதைய உற்பத்தி மாற்றங்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் முழுமையாக திரும்பப் பெறப்படும். செப்டம்பரில் இருந்து, ஒவ்வொரு ஓபெக்+ உறுப்பினரும் தங்கள் உற்பத்தியை சுதந்திரமாக உயர்த்திக்கொள்ள முடியும்” என்று செஞ்சுரி ஃபைனான்சியலின் தலைமை முதலீட்டு அதிகாரி விஜய் வலேச்சா கூறினார்.


மேலும் படிக்க | இந்திய பேட்மிண்டன் வீராங்கனைக்கு அமீரகத்தின் ‘Golden Visa’ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ