துபாய்க்கு வர விரும்பும் எந்தவொரு வெளிநாட்டவரும், எந்த விதமான ஒரு பயணமாக இருந்தாலும், அதற்கான விசாவைப் பெற்றிருக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு டூரிஸ்ட் விசா அல்லது விசிட் விசா மூலம் வருகை தருபவர்கள் அங்கே இருந்து கொண்டே விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கு உங்களுக்கு விசா பெற்றுத் தந்த ஏஜென்சியின் மூலமாக புதிய விசா பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்தினை விசா காலாவதியாவதற்கு 3 அல்லது 5 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விசாவை நீட்டிக்க மாற்ற 30 அல்லது 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
டூரிஸ்ட் விசாவில் துபாய்க்கு வரும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் துபாயில் வருகையின் போது விசாவைப் பெறுவதால், நீங்கள் முன்கூட்டியே விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்கள் துபாயில் நுழைவதற்கு முன்னதாகவே விசா பெற வேண்டிய தேவையில்லை. வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) இணையதளத்தில், GCC நாடுகளின் குடிமக்கள் மற்றும் பின்வரும் நாடுகளின் குடிமக்கள் வருகையின் போது விசாவைப் பெறலாம்.
இந்திய குடிமக்களை பொறுத்தவரை, சில இந்திய குடிமக்கள் வருகையின் போது விசாவிற்கும் தகுதி பெறலாம். சாதாரண பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் சில குறிப்பிட்ட இந்திய குடிமக்கள் இதில் அடங்கும்:
1. USA வழங்கிய விசிட் விசா வைத்திருப்பவர்கள்
2. அமெரிக்காவால் வழங்கப்பட்ட கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள்
3. UK வழங்கிய குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள்
4. ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள்.
இதுபோன்ற சமயங்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்த நாளிலிருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு விசா அல்லது கிரீன் கார்டு செல்லுபடியாகும் எனில், அதிகபட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு நீங்கள் விசா ஆன் அரைவல் பெறலாம்.
நீங்கள் வருகையின் போது விசாவிற்கு தகுதி பெறவில்லை என்றால், கீழ்கண்ட வகையில் விசா பெறலாம்:
1. சுற்றுலா விசா - 30-நாள் அல்லது 90-நாள்
சுற்றுலா விசாக்கள் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளால் பெறப்படலாம். உங்கள் திட்டத்தைப் பொறுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான சுற்றுலா விசாக்கள் 30-நாட்கள் அல்லது 90-நாள் காலத்திற்கு வழங்கப்படலாம் . சிங்கிள் எண்ட்ரி அல்லது பல எண்ட்ரிகளை அனுமதிக்கலாம்.
உங்கள் சுற்றுலா விசாவிற்கு யார் மூலம் விண்ணப்பிக்கலாம்?
1. விமான நிறுவனங்கள்
ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் சில நிபந்தனைகள் உள்ளன, அவை உங்கள் விசாவை ஏற்பாடு செய்ய வேண்டும். நிபந்தனைகளில் ஒன்று அவர்களுடன் பறப்பது. உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, விசிட் விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்தும் விசாரிக்கலாம்.
2. ஏஜென்சிகள் மற்றும் ஹோட்டல்கள் மூலம் சுற்றுலா விசாக்கள்
UAE இல் உள்ள உரிமம் பெற்ற பயண முகவர்கள் மற்றும் ஹோட்டல்கள் உங்களுக்காக ஒரு சுற்றுலா விசாவை ஏற்பாடு செய்யலாம், நீங்கள் அவர்கள் மூலம் டிக்கெட் வாங்கினால் மற்றும் குறிப்பிட்ட ஹோட்டலில் ஹோட்டல் முன்பதிவு செய்திருந்தால் அவர்கள் விசா பெற ஏற்பாடு செய்யலாம்
உள்ளூர் டூர் ஆபரேட்டருடன் இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிடைக்கும் சுற்றுலாப் பேக்கேஜ்களுக்கு உங்கள் நாட்டில் உள்ள பயண முகமைகளையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
3. ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்
விசாவை நீட்டிக்க தேவையான ஆவணங்கள்:
1. பாஸ்போர்ட் நகல் (குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்)
2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
3. பழைய விசா சுற்றுலா/ரத்துசெய்யப்பட்ட விசா நகல்
4. விசா ஆன் அரைவல் வசதியின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைந்திருந்தால், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் மட்டுமே தேவைப்படும்.
5. உறவினர் அல்லது நண்பர் மூலம் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், அவர்கள் தங்களுடைய வசிப்பிட விசா பக்கத்தின் நகலையும் UID எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ