இந்தியாவின் புதிய தலைமுறை பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான தனிஷா க்ராஸ்டோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் மதிப்புமிக்க ‘கோல்டன் விசா’-வை பெற்றுள்ளார். இது விளையாட்டிற்கான அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உயரடுக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. 19 வயதான தனிஷா, அமீரகத்தின் 10 வருட வசிப்பிடத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற இளைய பயனாளிகளில் ஒருவர் ஆவார்.
கோல்டன் விசாவைப் பெறுவது ஒரு பெரிய மரியாதை என்றும் இது அனைவருக்கும் வழங்கப்படும் ஒன்று அல்ல என்றும் என்று துபாயை தளமாகக் கொண்ட இந்திய ஷட்லர் கூறினார். தான் துபாயில் இருந்து பல போட்டிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதாகவும், இப்போது தன்னிடன் இந்த விசா இருப்பதால் தான் சுதந்திரமாக வந்து செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனிஷாவின் விசா அவரை ஒரு 'தொழில்முறை விளையாட்டு வீரர்' என்று பட்டியலிட்டுள்ளது. இது மிகவும் விசேஷமானது. இப்போது தனக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளதால், உலகம் முழுவதும் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கோவாவைச் சேர்ந்த இந்தியப் பெற்றோருக்கு துபாயில் பிறந்து, துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த தனிஷா, 10 வருட விசாவைப் பெற உதவிய துபாய் விளையாட்டு கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க | அமீரகத்தில் கனமழை: 24x7 சிறப்பு சேவையை அறிவித்து மக்களை மகிழ்வித்த விற்பனை நிறுவனம்
"நான் கோல்டன் விசாவிற்கு தகுதியுடையவளா என்று விசாரிக்க துபாய் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் அதிகாரிகளை அணுகியபோது, அவர்கள் நேர்மறையாக பதிலளித்தனர். நான் அதை அறிவதற்கு முன்பே, எனது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டதாகக் கூற அழைத்தனர்," என்று அவர் கூறினார்.
அடிப்படையில் ஒரு சிறப்பு இரட்டையர் மற்றும் கலப்பு-இரட்டை வீராங்கனையான தனிஷா, இந்த விசா மூலம் தனது விளையாட்டை மேம்படுத்துவதிலும் தனது வாழ்நாள் லட்சியத்தைத் தொடர்வதிலும் அதிக ஊக்கம் கிடைக்கும் என்று கூறினார்.
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்று அவர் தெரிவித்தார். ஆனால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது தற்போதைய இலக்கு என்றும் அவர் கூறினார்.
WBF உலக சாம்பியன்ஷிப் டோக்கியோவில் ஆகஸ்ட் 21 முதல் 28 வரை நடைபெறுகிறது.
முன்னாள் ஆல் இங்கிலாந்து சாம்பியனும் தற்போதைய இந்திய பயிற்சியாளருமான புல்லேலா கோபிசந்தின் கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெறும் தனிஷா, முக்கியமாக இரட்டையர் வடிவத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தனது விளையாட்டில் இன்னும் நிறைய முன்னேற்றம் தேவை என்பதை முதலில் ஒப்புக்கொண்ட தனிஷா, அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, இலக்கை அடைய கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறார்.
“விளையாட்டைப் பற்றி நான் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன், மேலும் கடினமான பயிற்சி மற்றும் சிறந்த வீரர்களுடன், எனது விளையாட்டை மேலும் வளர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்." என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
போர்ச்சுகீசிய கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் உட்பட ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா வழங்கப்பட்ட சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களின் பட்டியலில் தனிஷா இணைந்துள்ளார்.
கோல்டன் விசா திட்டம் முதன்முதலில் 2019 இல் தொடங்கியது. இதை பெறுபவர்கள் 10 ஆண்டுகள் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ அனுமதிக்கப்படுகிறார்கள். இது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கத்தக்கது.
மேலும் படிக்க | UAE Jobs: ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுவோருக்கு நற்செய்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ