ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்குப் பகுதிகளில் பெய்த இடைவிடாத கனமழை சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெரும் அவசர நிலை ஏற்பட்டதைப் போல் நிலைமை மாறியுள்ளது. அதிகாரிகள் மழையில் சிக்கித் தவித்த குடும்பங்களை மீட்டனர், அதே நேரத்தில் சில சாலைகள், சுற்றுலா இடங்கள் மற்றும் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கையாக மூடப்பட வேண்டியிருந்தது. நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அல் தாயிட் செல்லும் சாலை மூடப்பட்டது.
வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் முற்றிலும் அவசியமானால் தவிர வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அத்தியாவசிய துறை தவிர அனைத்து பிற துறை அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். பல தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணிகளை செய்கின்றனர். அவசரகால குழுக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் போன்ற அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே வெளியே செல்கிறார்கள்.
சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, மேலும் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல கடைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் அத்தியாவசிய மளிகைப் பொருட்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தான் இதுவரை கண்டிராத மிக மோசமான மழை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது
இங்குள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு
மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ