டெல்லி: பத்ம விருது வெற்றியாளர்களான இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'பத்ம' விருதுகள் வழங்கபடுகிறது. 2018-ம் ஆண்டுக்கான 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவித்துள்ளனர். இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளனர்.


இதையடுத்து, பத்ம விருது வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பத்ம விருதுகளை வழங்கா உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.