மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்! நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பாஜக-வுக்கு எதிராக பலமான அணியை உருவாக்குவதில் மாநில கட்சிகள் தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. இந்த முயற்சிக்கு அடித்தளமாக கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி தனது பதவியேற்பு விழாவுக்கு பல மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அழைப்பை ஏற்று பாஜவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் பலத்தை நிரூபிக்க பல கட்சி தலைவர்கள் குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் ‘கிங் மேக்கர்’களாக இருந்து மத்திய அரசை தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார். 


மேலும் அவர், மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதிய ஜனதாவை வீழ்த்தும் எனவும் நாட்டில் பொருளாதாரத்திற்கு நன்மை செய்யும் என நினைத்து பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தேன், ஆனால் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகள் திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது. ஆந்திராவில் பாஜக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகளை உருவாக்க முயல்கிறது. 


பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார்’ என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.