காதலி விலகி செல்வதற்கான 5 அறிகுறிகள், முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்
காதலில் இருக்கிறீர்கள் என்றால், இருவருக்கும் இடையில் மனக்கசப்பு தொடங்கிவிட்டது என்றால் ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் எழுவது இயல்பு தான். இருப்பினும் பிரிந்து செல்வது என்பது உட்சபட்சமாக எடுக்கப்படும் முடிவு.
இந்த சூழலில் காதலி உங்களை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்தால் என்னென்ன அறிகுறிகள் எல்லாம் தென்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதனை வைத்து நீங்கள் அதிர்ச்சியான சூழலை எதிர்கொள்வதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
உங்களுடன் பேச மாட்டார். கண்ணில் தென்பட்டாலும் பார்த்தும் பார்க்காததுபோல் விலகிச் சென்றுவிடுவார். உங்களுடன் பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கமாட்டார். எந்தவகையில் நீங்கள் தொடர்பு கொண்டாலும் உங்களை முழுவதுமாக புறக்கணித்துவிடுவார்.
உங்களுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்துவிட்டு ஒருமுறைகூட உங்களிடன் பேசுவதற்கு முன்வரவில்லை என்றால், அவரை நீங்கள் மீண்டும் மீண்டும் எதிர்பார்க்க வேண்டாம். ஏனென்றால் அவர் உங்களைவிட்டு செல்ல முடிவெடுத்துவிட்டார் என்றே அர்த்தம்.
காதலியை பார்க்க வேண்டும் என்ற ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் உங்களுக்குள் இருப்பதைப் போல அவரிடம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிச்சயம் உங்களிடம் பேச முன் வந்திருப்பார். பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஏதாவதொரு முயற்சியை எடுத்திருப்பார்
ஆனால், அப்படியான சமிக்கைகள் எந்த வழியிலும் வரவில்லை என்றால், உங்களைப் போன்ற ஆசையும், எதிர்பார்ப்பும் அவருக்கு இல்லை என்றே அர்த்தம். அதனால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வீணாகவே செல்லும்.
அந்த முயற்சிகள் உங்களுக்குள் காயத்தை, வலியையும் அதிகப்படுத்துமே தவிர காதலியுடன் சேர்க்க வாய்ப்பில்லை. அவராக வரும்வரை காத்திருங்கள். வரவில்லை என்றால் விலகிச் சென்று உங்கள் வாழ்க்கையை பார்ப்பது நல்லது.
ஏனென்றால் உங்களை விட்டுச் செல்ல முடிவெடுத்த காரணத்தாலேயே அவரின் நடவடிக்கைகள் எல்லாம் இப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
உங்களைக் காட்டிலும் வேறொன்றுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டார் என்றே அர்த்தம். எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது. ஆனால், அந்த குறிப்பிட்ட காலம் என்பதை தவறாக புரிந்து கொண்டு வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள்.
பிடிக்காதவர்களை எந்தவழியில் துரத்தினாலும் பயனில்லை. உங்களை வேண்டாம் என்று கூறியவர் பின்னால் செல்வது நேரத்தையும், அழகான வாழ்க்கையையும் சீரழித்துக் கொள்வதற்கு சமம். மாறாக உங்கள் குடும்பம், உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக இருக்க அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்குங்கள்.