உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? ‘இந்த’ 6 உணவுகளை சாப்பிடுங்கள்!
நம் உடலில் உள்ள சிவப்பு ரத்த நாணங்கள்தான் (Red Blood Cells) நமது உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. வயது வந்த ஒரு ஆணுக்கு 13.5 கிராம் முதல் 17.5 கிராம் வரை சிவப்பு ரத்த நாணங்கள் இருக்க வேண்டுமாம். அதே போல பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டுமாம்.
ஃபோலிக் அமிலம் நிறைந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த நாணங்களின் கவுண்டுகள் அதிகரிக்கும். அப்படி, ஃபோலிக் அமிலங்கள் அதிகம் இருக்கும் உணவுகள் வாழைப்பழம், கீரை வகைகள், ப்ரக்கோலி போன்றவைதான்.
மாதுளை பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து ஆகிய இரண்டும் இருக்கின்றன. ஹீமோகுளோபினை அதிகரிக்க இது சிறந்த உணவுகளில் ஒன்றாகும்; ங்கள் ஹீமோகுளோபின் அளவு சமமாக இருப்பதை உறுதி செய்வதற்காக தினமும் மாதுளை ஜூஸ் குடிக்கவும்.
பேரிச்சம் பழம், ஆற்றல் நிரம்பிய உணவுகள் ஒன்றாகும். மேலும், இது உடலுக்கு மிகவும் ஊட்டமளிக்கிறது. பேரிச்சம்பழம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இரும்புச் சத்து நிறைந்த சத்துக்களையும் வழங்குகிறது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட், சிறந்த உணவுகளுள் ஒன்றாகும். இதில் இரும்புச் சத்து மட்டுமின்றி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்களுடன் ஃபோலிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆரோக்கியமான இரத்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த பீட்ரூட் சாறு தினமும் குடிக்கவும்.
பூசணி விதைகளில் போதுமான கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில், சுமார் எட்டு மில்லிகிராம் இரும்புச் சத்து வழங்குகின்றன. இதை சாலட்டுகளில் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் வேறு எந்த உணவுகளில் வேண்டுமானாலும் இதை சேர்த்துக்கொள்ளலாம்.
தர்பூசணியில் இரும்பு மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதை சாப்பிடுவதன் காரணமாக ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம். மேலும், இது உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்களில் ஒன்றாகும்,