இன்று OTT-ல் வெளியாகி உள்ள 6  புதிய திரைப்படங்கள்!

Fri, 12 Nov 2021-2:51 pm,

அரண்மனை-3 :  சுந்தர்.C இயக்கத்தில் உருவான படம் "அரண்மனை-3". இதில் சுந்தர்.C , ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா ஜெரெமையா, சாக்‌ஷி அகர்வால், விவேக் என பெரிய நட்சத்திர  பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இது ஒரு நகைச்சுவை கலந்த திகில் தமிழ் படமாகும். இது ' Zee5 ' இயங்குதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. 

ஸ்பெஷல் OPS 1.5 தி ஹிம்மத் ஸ்டோரி (SpecialOPS 1.5 The Himmat Story ) :

இது ஒரு அச்ஷன் கலந்த த்ரில்லர் ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி தொடராகும். இதனை இயக்கியவர் நீரஜ் பாண்டே. இது ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் இன்று ' Hotstar தளத்தில் வெளி ஆகுகிறது.

ஜங்கில் கிரூஸ் (Jungle Cruise) : 

ஜோம் காலெட் செரா இயக்கத்தில் உருவான படம் "ஜங்கில் கிரூஸ் (JungleCruise)".  அமேசான் காட்டில் ஆபத்துகள் நிறைந்த ஒரு பகுதியில் உள்ள ஒரு அறிய வகை மலரை தேடி செல்வதே இந்த படத்தின் கதை. இந்த படமும் இன்று ' Hotstar ' இயங்குதளத்தில் ரீலீஸ் ஆகுகிறது . 

கனகம் காமினி கலஹம் (Kanakam Kaamini Kalaham) : 

ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கத்தில் உருவான நகைச்சுவை கலந்த மலையாள படம் தான் "கனகம் காமினி கலஹம் (Kanakam Kaamini Kalaham)". பாலி ஜூனியர் பிக்சர்ஸ் பேனரின் கீழ் நிவின் பாலி இந்த படத்தை தயாரிக்கிறார்.  இந்த படம் இன்று ' Hotstar ' இயங்குதளத்தில் ரீலீஸ் ஆகுகிறது . 

ரெட் நோட்டீஸ் (RedNotice) : 

ராசன் மார்ஷல் தர்பார் இயக்கத்தில் உருவான படம் "ரெட் நோட்டீஸ் (RedNotice)" . இது ஒரு அமெரிக்க அதிரடி நகைச்சுவை படமாகும் .முதலில் ' யூனிவர்சல் பிக்சர்ஸ் ' மூலம் வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் ' Netflix ' விநியோக உரிமையை பெற்றது. இந்த படம் இன்று ' Netflix ' இயங்குதளத்தில் ரீலீஸ் ஆகுகிறது . 

ஷாங்ச்சி & தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்க்ஸ் (ShangChi & The Legend of theTen Rings ) : 

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் உருவான படம் " ஷாங்ச்சி & தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்க்ஸ் (ShangChi & The Legend of theTen Rings ) ". இது மார்வெல் காமிக்ஸை அடிப்படையாக கொண்ட அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இது இன்று ' Hotstar' தளத்தில் வெளியாகி உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link