நச்சு எண்ணங்களை போக்கி மனதை சுத்தமாக்கும் பயிற்சிகள்..!

Thu, 08 Aug 2024-8:47 pm,

தியானம் -

மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை நீக்குவதற்கு சிறந்த வழி தியானம். தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் குறைந்தது 5 நிமிடங்கள் ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி பயிற்சி செய்யுங்கள். கண்களை மூடிக் கொண்டிருக்கும்போது வரும் எதிர்மறை எண்ணங்கள் இனி வரக்கூடாது என நினைத்து அதனை தள்ளிவிடுங்கள். உங்கள் மீது கவனம் செலுத்துங்கள். 

உப்பு நீர் குளியல் -

உப்பின் சுத்திகரிப்பு பண்புகள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது. அதனால், உப்பு குளியல் எடுக்கும்போது எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடலாம். ஒரு வாளியில் சூடான தண்ணீரை நிரப்புங்கள். அதில் உப்பைக் கலக்கி சிறிது நேரம் ஊற வைக்கவும். அதன்பின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் விலக வேண்டும் என நினைத்துக் கொண்டு குளியுங்கள். 

ஒளியை பார்த்தல் -

ஒளி இருளில் இருந்து வெளிச்சத்தை தருவதைப் போல கெட்ட எண்ணங்களில் இருந்தும் விடுபட வைக்கும். அதனால் ஒரு அமைதியான இடம் அல்லது உங்கள் பூஜை அறையில் மின் விளக்குகளை எல்லாம் அனைத்துவிட்டு விளக்கில் தீபம் ஏற்றி சிறிது தொலைவில் அமர்ந்து அதனை உற்றுப் பாருங்கள்.

அப்போது ஒளியின் அழகையும் அது மிளிர்வதையும் கண்டு ரசியுங்கள். அந்த ஒளியைப் போல் கெட்ட எண்ணங்களில் இருந்து நீங்களும் விடுபட்டு பிரகாசிக்க வேண்டும் என நினைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து செய்யும்போது நிச்சயம் மாற்றம் தெரியும். 

நல்ல புத்தகங்களை படித்தல் -

கெட்ட எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு நல்ல புத்தங்களை படிப்பதும் ஒரு அற்புதமான வழியாகும். நேர்மறை சிந்தனைகளை வளர்க்ககூடிய புத்தகங்களை வாங்கி படியுங்கள். அதில் தீய எண்ணங்களில் இருந்து விடுபட்டவர்களின் அனுபவங்களும், சோதனை காலத்தை எப்படி கடந்தார்கள் என்ற கதையும் இருக்கும். அந்த கதைகள் எல்லாம் உங்களையும் பாதித்து, நேர்மறை சிந்தனை செய்ய தூண்டும். நீங்களும் நேர்மறையாகவே சிந்திக்க தொடங்குவீர்கள். 

மந்திரங்களை கேட்டல் - 

’ஓம்’ என்ற மந்திரத்தை ஆடியோவாக உங்கள் ஹெட்போனில் கேட்கவும். இதற்கு முதலில் அமைதியான இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் அமர்ந்து சில மணி நேரம் அந்த மந்திரத்தையே கேட்டுக் கொண்டிருங்கள். உங்கள் மனம் அலைப்பாய தொடங்கினால் அதற்கு அலைபாயாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். தொடர் பயிற்சி நீங்கள் நினைக்கும் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். 

மந்திரம் உச்சரித்தல் -

கெட்ட எண்ணங்களில் இருந்து நீங்கள் விடுபட நினைத்தால் இஷ்ட தெய்வத்துக்கான மந்திரத்தை எடுத்து படியுங்கள். சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளாகவோ உச்சரித்துக் கொண்டே இருங்கள். 

அந்த மந்திரங்கள் உங்களை நல்வழிப்படுத்தும். கெட்ட எண்ணங்கள் மீண்டும் தோன்றாமல் இருப்பதை உறுதி செய்யும். ஒருவேளை தீய எண்ணங்கள் தோன்றினாலும், மந்திரத்தை உச்சரித்தீர்கள் என்றால் மனம் அந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. நீங்கள் விரைவில் நல்ல சிந்தனையோடு வலம் வருவீர்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link