பசங்களின் காதலை இந்த 7 அறிகுறிகள் மூலம் பெண்கள் தெரிந்து கொள்ளலாம்
நெருங்கிய நண்பராகவே உங்களுடன் இருக்கும் ஒருவர் உங்களை காதலிக்கிறாரா? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். சிலநேரங்களில் அவரின் குணாதிசயம் இப்படி தான் இருக்கும் என நீங்கள் அவரின் காதல் மொழியை கண்டு கொள்ளாமல் கூட இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால், கூடவே இருக்கும் நண்பனின் உடல்மொழியை வைத்து அவர் உங்களை காதலிக்கிறாரா? என்பதை ஓரளவுக்கு ஊர்ஜிதமாக சொல்லிவிட முடியும். அடிக்கடி உங்கள் கண்களைப் பார்த்து பேசுவது, நீங்கள் அவரை பார்க்கும்போது உங்கள் கண்களை பார்க்க முடியாமல் விலகி வேறு திசையில் பார்த்து பேசுவது இருக்கும்
உங்கள் வருகையை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது. உங்களை நேரில் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சுவிட்டு முகம் மலர்ந்து சிரிப்பை வெளிப்படுத்துவது இருக்கும்.
நண்பனுடன் இருக்கும் நேரத்தில் உங்களுக்கும் அவருக்கு இனம்புரியாமல் திடீரென பதட்டம் வருவது, என்ன பேசுவது என தெரியாமல் இருவரும் உளறுவதுபோல் பேச தொடங்குவது, இருந்தாலும் அதனை இருவரும் ரசிப்பது.
சில நேரங்களில் பேச்சு திக்கி திக்கி பேசுவது. தொடர்ச்சியாக ஒருவிஷயத்தை திக்காமல் பேச முடியாது. ஆசையாக சொல்ல வரும் விஷயத்தை முனுமுனுத்துக் கொண்ணே முதலில் சொல்வது, என்ன என்று திரும்ப கேட்கும்போது சிரித்துக் கொண்டே மழுப்பலாக வேறொன்றை பதிலாக கூறுவது
உங்களுடனேயே அதிகநேரம் செலவிட விரும்புவார். உங்களுக்கும் அவருடன் இருப்பது மட்டுமே மிகவும் பிடித்திருக்கும். பிரைவசியான விஷயங்களை தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பீர்கள். அடிக்கடி உரையாடலின் நடுவே இயல்பாக தொட்டு தொட்டு பேசுவது, முதுகில் தட்டுவது, கையை இறுக பற்றி உரையாடுவது ஆகியவை இருக்கும்.
நீங்கள் வேறொருவருடன் உரையாடும்போது அவருக்கு நிச்சயம் கோபம், பொறாமை வெளிப்பட்டால் ஏறக்குறைய நண்பன் காதலிக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலே சொன்ன காரணங்கள் எல்லாம் அவர் உங்களிடம் மௌன மொழியாக காதலை தெரிவித்த தருணங்களே.
நீங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துபோலவே இருந்தீர்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். காதல் பிடித்திருந்தால் மௌனத்தின் மொழியாகவும் வெளிப்படுத்தி, அதனை ரசிப்பதில் தவறவில்லை. ஆனால், காதலனை நீண்ட நாட்கள் காத்திருக்கவிடாதீர்கள். உங்கள் சம்மதத்தையும் இயல்பாக கூறிவிடுங்கள்.