மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான எண்டிஏ அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது. ஆகையால் இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் 6 முக்கியமான கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன் வைத்துள்ளனர். இவற்றில் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. டிஏ அரியர், டிஏ ஹைக், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகிய பிற கோரிக்கைகளும் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
இந்த பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு வெளியாகுமா? இதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? அடுத்த ஊதியக்குழு பற்றிய அறிவிப்பு வந்தால், அதன் பரிந்துரைகள் எப்போது அமலுக்கு வரும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பட்ஜெட்டுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிதி அமைச்சகத்தின் முன் வைத்துள்ளனர். முன்னதாக ஜூலை 6 ஆம் தேதி, அமைச்சரவை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு 2024 பட்ஜெட்டுக்கான தனது கோரிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய அரசு ஊழியர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை மோடி அரசு இப்போது நிறைவேற்றலாம் என கூறப்படுகின்றது.
வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 28 பிப்ரவரி 2014 அன்று 7வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பை வெளியிட்டார். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 1 ஜனவரி 2016 முதல் அமலுக்கு வந்தன.
இதன் படி பார்த்தால், 2026 ஆம் ஆண்டில் அடுத்த ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். பொதுவாக ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆகும். இப்போது 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அதன் பரிந்துரைகள் 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும். இதன் காரணமகாத்தான் அரசு இதை தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படு வருகின்றது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாடளாக இருந்து வருகிறது. புதிய ஊதியக்குழு அமைக்கப்படும்போது இது செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 -இலிருந்து 3.68 ஆக உயர்ந்தால், அதன் அடிப்படையில் சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கும். இது மட்டுமின்றி, குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 ஆக உயர்த்தப்படும். இது ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படக்கூடும். அரசு வழக்கமான ஊதியக்குழு முறைகளை பின்பற்றினால் இந்த ஏற்றங்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதுமட்டுமின்றி, 8வது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படி (Dearness Allowance), வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) போக்குவரத்துக் கொடுப்பனவு (TA) போன்ற பிற சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் மாத சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.