மது பிரியர்களுக்கு... பீர் அருந்தும் போது சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்
குறைந்த அளவு ஒயின் அல்லது பீர் உட்கொள்வது உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் என்று பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால், வெறும் வயிற்றில் மது அருந்துவது அல்லது பொருத்தம் இல்லாத உணவுகளை பீர் அல்லது ஆல்கஹாலுடன் உட்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிரெட் மற்றூம் பிரெட்டினால் செய்யப்பட்ட எதையும் பீருடன் சாப்பிடக்கூடாது. இரண்டு பொருட்களிலும் ஈஸ்ட் இருப்பதால், அதிக ஈஸ்டை உங்கள் உடலால் ஜீரணிக்க முடியாது. இதன் காரணமாக, உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்
அமில உணவுகளைப் போலவே, சாக்லேட்டிலும் காஃபின், கொழுப்பு மற்றும் கோகோ உள்ளது. பீர் உடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
பீருடன் காரமான பொருட்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காரமான பொருட்களில் கேப்சைசின் உள்ளது. இது வயிற்று எரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பெரும்பாலானோருக்கு உப்பு சேர்த்த வேர்க்கடலை, உலர் பழங்கள் அல்லதுமற்ற வகை தின்பண்டங்களை பீருடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். இதில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது நீரிழப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இது எடிமா மற்றும் இரத்த அழுத்தத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
பீர் உடன் பர்கர் அல்லது பிரஞ்சு பிரைஸ் போன்ற அதிக உப்பு சேர்த்த தின்பண்டங்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது நீங்கள் மது அருந்தும்போது உங்கள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு நிறைந்த பொருட்கள் உங்கள் தாகத்தையும் அதிகரிக்கும். மேலும், பீர் ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது. இது அதிகமாக சிறுநீர் கழிக்க வகை செய்கிறது.