தி கோட் ரிலீஸ்: ரசிகர்களுக்கு விஜய் சொன்ன திடீர் அட்வைஸ் - என்ன விஷயம்?
நடிகர் விஜய் (Actor Vijay) கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vetri Kazhagam) என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து இதற்கான உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தவெகவின் அதிகாரப்பூர்வ கொடியையும், பாடலையும் வெளியிட்டார். கட்சிக்கொடியில் இடம்பெற்றிருந்த இரட்டை யானை சின்னத்தை நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து கோரிக்கை கிளம்பியது. இருப்பினும், அதுதொடர்பாக எந்த அறிவிப்பும் தவெக தரப்பில் இருந்து வரவில்லை.
இந்த மாதம் 23ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டு, அதற்கான காவல்துறை அனுமதிக்காக கட்சியினர் காத்திருக்கின்றனர்.
நஅந்த வகையில், விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் The Greatest Of All Time (The GOAT) திரைப்படம் வரும் செப். 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் சில நாள்களுக்கு முன் தொடங்கி அதிரடியாக விற்பனையாகி வருகிறது.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்திற்கு பின் ரிலீஸாக இருக்கும் முதல் திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
The GOAT திரைப்படத்திற்கு இன்னும் ஒரே ஒரு படத்தில்தான் நடிக்க இருப்பதால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்தே ஆக வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், The Greatest Of All Time திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில், ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை கூறியுள்ளார்.
The GOAT படம் திரைக்கு வரும் போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அரசியல் கட்சியை தொடங்கிவிட்டதால் தொண்டர்களும், ரசிகர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என வாய்மொழி அறிவிப்பாக அறிவுரை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த அக்டோபர் மாதத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு சார்ந்த கொண்டாட்டத்தின் போது சென்னை ரோஹினி திரையரங்கம் ரசிகர்களால் சூறையாடப்பட்டது பெரிய சர்ச்சையை கிளிப்பியது கவனத்திற்கு உரியது.