புதிதாக அரசியில் கட்சி தொடங்கும் விஷால்! விஜய்க்கு போட்டியா?
நடிகர் விஷால் தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், தனிக்கட்சியா அல்லது கூட்டணியா என்பதை அந்த சமயத்தில் முடிவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விஷால் அரசியல் நுழைவு குறித்து பல செய்திகள் வெளியான நிலையில், இன்று விஷால் உறுதிபடுத்தி உள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகளை செய்து தர அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் நிறைய உதவிகளை செய்து வருகிறேன். வரும் காலத்திலும் அதனை தொடர்ந்து செய்வேன். மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று விஷால் இன்று கூறியுள்ளார்.
விஷால் சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதற்காக மனு தாக்களும் செய்து இருந்தார். ஆனால் அவரது வேட்புமனு கடைசி நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்து இருந்த நிலையில், விஷாலும் அதில் இணைந்துள்ளார்.