நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற பல படங்களில் நடித்து இருந்தார் அஞ்சலி. இதில் அங்காடி தெரு படம் நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.
தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. மேலும் நடிகையாக மட்டுமின்றி ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாகவும் வளம் வந்தார். பிறகு தமிழ் படங்களை ஓரம் கட்டி விட்டு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு மீடியாக்களில் வெளியான இந்த தகவல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரவி உள்ளது. இதனால் அஞ்சலியின் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர்.