ஹன்சிகா மோத்வானிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர்?

Thu, 25 May 2023-2:15 pm,

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியவை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

 

பிரபல டோலிவுட் நடிகர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவருக்கு சரியான பாடம் கற்பிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாகவும் ஹன்சிகா கூறியதாக தெலுங்கு ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

 

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ, ஹன்சிகா மோத்வானிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பிரபல நடிகர் யார் என்று ரசிகர்கள் யோசித்து கொண்டிருந்தனர்.

 

தற்போது தன்னை பற்றி வெளியான அந்த செய்தி போலியானது என்று நடிகை ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், போலியான செய்தியினை வெளியிட்டவர்களை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

திருமணத்துக்கு பிறகு ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.  தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடருக்கான வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link