ஈழத்து அழகி லாஸ்லியா மரியனேசனின் Wow புகைப்படங்கள் ஒரு பார்வை..!

Sat, 10 Oct 2020-2:19 pm,

செய்தி வாசிப்பாளராக இருந்து இப்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் நடிகை லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுனுடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

பிரண்ட்ஷிப் திரைப்படத்தை தொடர்ந்து பெயரிடப்படாத பல திரைப்படங்களில் அடுத்தடுத்து லாஸ்லியா நடித்து வருவதை தொடர்ந்து இவரின் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

இந்நிலையில் சமீப காலமாகவே பல்வேறு லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வரும் லாஸ்லியா இப்போது கோட் சூட்டில் மிரட்டலான லுக்கில் கோலிவுட்டை அதிர வைத்து ரசிகர்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல தைரியமான பொண்ணு என்று பெயரெடுத்த லாஸ்லியா பின் கவீனுடன் காதலில் விழுந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பலராலும் பங்கமாக கலாய்க்கப்பட்டு வந்த போதிலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரது இதயங்களையும் வென்ற லாஸ்லியா திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் முதன்முறையாக திரைப்படங்களில் அறிமுகமாக இருக்கும் "பிரண்ட்ஷிப்" என்ற திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link