Madonna Sebastian : கடற்கரையில் கடல்கண்ணியாக மடோனா செபாஸ்டியன்! வைரல் போட்டோக்கள்..

Fri, 05 Jul 2024-3:25 pm,

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து தென்னந்திய திரையுலகில் பிரபலமாக வலம் வருபவர் மடோனா செபாஸ்டியன்.

மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் நடித்து அறிமுகமான மடோனா செபாஸ்டியன், அடுத்து நடிக்க வந்ததே தமிழ் திரையுலகிற்குதான். 

தமிழில், ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் யாழினியாக நடித்திருந்த இவர் அதன் மூலம் பல இளைஞர்களுக்கு ஃபேவரட் கதாநாயகியாக மாறினார். 

மடோனா செபாஸ்டியனுக்கு படத்தில் நடிப்பது மட்டுமல்ல பாடல்கள் பாடுவதிலும் நாட்டம் உள்ளது.

மடோனா, ஒரு சில மேடை நிகழ்ச்சிகளில் பாடல் பாடியிருக்கும் இவர், விருது நிகழ்ச்சி ஒன்றில் பாடி சமீபத்தில் வைரலானார். 

மடோனா, கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். இவரது கேரக்டர் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் இது பெரிய கேமியோவாக பார்க்கப்பட்டது. 

மடோனா, அடிக்கடி போட்டோ ஷூட் செய்யும் பழக்கம் உள்ளவர். இவர், தற்போது புதிதாக சில போட்டோக்களை பதிவிட்டிருக்கிறார். 

கடற்கரைக்கு அருகே அமர்ந்து இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link