வெட்டவெளியில் ரொமாண்டிக் போட்டோஷூட்! நயன்-விக்கியின் புகைப்படங்கள்..
தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இருப்பவர்கள், நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்கள், 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
2022 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளின் பெயர், உயிர் மற்றும் உலக். இந்த குழந்தைகளுக்கு தற்போது இரண்டரை வயது அகிறது.
இளம் காதல் ஜோடிகள் பலருக்கு, நயன்-விக்னேஷ் சிவனின் ரிலேஷன்ஷிப் எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், நயன்தாரா தனக்கு ஏற்பட்ட பயங்கரமான காதல் தோல்விகளுக்கு பிறகு விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார்.
நயன்தாரா, சில மாதங்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதையடுத்து தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவிற்கு சளைத்தவர் இல்லை. இவரது பக்கத்தை விசிட் செய்யும் மக்கள், “இது விக்னேஷ் சிவனின் பக்கமா அல்லது நயன்தாராவின் ஃபேன் பக்கமா” என்று குழம்புவர். அந்த அளவிற்கு நயன்தாராவை ரசித்து ரசித்து சில போட்டோக்களை வெளியிட்டிருப்பார்.
நயன் விக்கியின் தற்போதைய போட்டோக்கள் சில தற்போது வெளியாகியிருகின்றன.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி தெளித்து வருகின்றனர்.