இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் உச்சம்.. பணக்கார கோடீஸ்வர யோகம், முழு பலன் இதோ

Wed, 28 Feb 2024-9:19 am,

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி வருமானத்தில் உயர்வை தரும். மார்ச் 15க்கு பிறகு சம்பள உயர்வு கிடைக்கும். தாம்பத்திய வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். மூத்த சகோதரரின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி சில சிக்கலை தரலாம். பணியிடத்தில் தகராறு ஏற்படலாம். எனினும் பொருளாதார வசதிகள் பெருகும். வியாபாரத்தில் உயர்வை காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மோசமடையலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டம் அம்சமாக இருக்கும். அதிர்ஷ்டம் பெருகும். தைரியம் அதிகரிக்கும். கடின உழைப்பு ஏற்ற பலனைப் பெறுவீர்கள்.

கடகம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வயிற்றில் சில பிரச்சனைகள் வரலாம். வெளி உணவு, பானங்ககளை தவிர்ப்பது நல்லது. தொற்று நோய் ஏற்படலாம். பண கஷ்டம் ஏற்படலாம்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி சுபமாக கருதப்படுகின்றது. சுக்கிரனின் இந்த மாற்றம் வியாபாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் சற்று சலசலப்பை ஏற்படுத்தும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும். தொலைதூரப் பயணத்தால் செலவுகள் அதிகரிக்கலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை.

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி பொருளாதார ரீதியாக பல நன்மைகளை அளிக்கும். தொழிலில் சுக்கிரனின் அருளால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். குடும்ப வாழக்கை நன்றாக இருக்கும். வேலையில் சில சவால்கள் சந்திக்க நேரிடலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி சவால்களை தரும். தாயுடன் சில சந்தைகள் வரலாம். வாக்குவாதம் செய்வதை தவிர்க்க முடிந்தவரை முயற்சியுங்கள். உத்தியோகத்தில் கடினமான் சூழல் நிலவும், நினைத்த பலனை பெற முடியாமல் போகலாம். 

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பண வரவுடன், சுப செலவுகளும் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் செல்லலாம்.  இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி சுபமாக கருதப்படுகின்றது. பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். சுப ராஜயோகத்தால் பணவரவு ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சொத்து வாங்கலாம்.

சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்கு சாதகமாக இருக்கும். வேலைவாய்ப்பு பெறலாம். செல்வாக்கு அதிகரிக்கலாம். நிதி நிலை மேம்படும். திருமணமான வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சுக்கிரன் பெயர்ச்சி மீன ராசிகளின் பொருளாதார நிலையில் இறக்கத்தை ஏற்படுத்தலாம். கடன் வாங்கலாம். கடனை திருப்பி கொடுப்பதில் சிரமம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் ஏற்படும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link