மகாராஜா வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! இயக்குனர் யார் தெரியுமா?

Fri, 23 Aug 2024-3:10 pm,

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 

 

1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ்.

 

இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் பெருமை கொள்கிறது என்று டி.ஜி. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

 

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார். 

 

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link