நடராஜனுக்கு கேக் ஊட்டிய அஜித்! பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்!

Thu, 04 Apr 2024-8:38 am,

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று ஏப்ரல் 4ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இந்நிலையில் நேற்று இரவு அஜித் அவருடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார்.

 

அஜித் நடராஜனுக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அஜித் இதற்கு முன்பு இப்படி யாருக்கும் பிறந்தநாள் கொண்டாடியசெய்திகள் வந்தது இல்லை.

 

அஜித் மகன் அவ்வப்போது சென்னை அணிக்கு சப்போர்ட் செய்ய மைதானம் வருவார். இந்நிலையில் நடிகர் அஜித்தும் கிரிக்கெட் ஆர்வலர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

 

சேலத்தை சேர்ந்த நடராஜன் தற்போது ஐபிஎல்லில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி பிரபலம் ஆனார்.

 

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link