இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை அம்சங்களா? அசத்தும் Bounce Infinity E1 மின்சார ஸ்கூட்டர்
இந்த ஸ்கூட்டரை நிறுவனம் வெறும் ரூ.36,000 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது பேட்டரி இல்லாத ஸ்கூட்டரின் விலையாகும். பேட்டரியுடன் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.68,999 ஆகும். நிறுவனம் இன்று முதல் இந்த மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரை வெறும் ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டியை 5 வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் பேட்டரியுடனும் பேட்டரி ஆப்ஷன் இல்லாமலும் கிடைக்கிறது. 'Battery-as-a-Service' வசதியின் கீழ், வாடிக்கையாளர்கள் பேட்டரி இல்லாமல் இந்த மின்சார வாகனத்தை வாங்கலாம்.
பவுன்ஸ் இன்ஃபினிடி, 2 kWh-R லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை செல்லும். இந்த மின்சார வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிமீ ஆகும்.
பவுன்ஸ் இன்பினிட்டியில் டிராக் மோடும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் பஞ்சரானாலும் ஸ்கூட்டரை ஓட்ட முடியும். இந்த புதிய மின்சார ஸ்கூட்டரை ஸ்மார்ட் செயலிகளுடனும் இணைக்கலாம். இது பல அம்சங்களைப் பயன்படுத்துவதை மிகவும் எளிதாக்குகிறது.
2021 ஆம் ஆண்டில், சுமார் 52 கோடி ரூபாய்க்கு 22Motors உடன் 100 சதவீத ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியாளரான பவுன்ஸ், ராஜஸ்தானில் உள்ள 22 மோட்டார்ஸின் பிவாடி ஆலை மற்றும் அங்குள்ள சொத்துகளின் உரிமையைப் பெற்றுள்ளது.