மாயங்கள் செய்யும் நோ சுகர் டயட்... ஒரு மாதத்தில் தெரியும் வியக்கத்தக்க மாற்றங்கள்
நோ சுகர் டயட் உடலுக்கு நன்மை பயக்கும் பலவிதமான டயடுகளில் நோ சுகர் டயட்டும் ஒன்று. இந்த டயட் முறையை கடைப்பிடிக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சுகர் என்னும் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது தான்.
சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தல்: சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது, நேரடியாக எடுத்துக் கொள்ளும் சர்க்கரை மட்டும் அல்லாது, கேக்குகள் பிஸ்கட்டுகள், ஐஸ்கிரீம் வகைகள் போன்ற சர்க்கரை நிறைந்த அனைத்து உணவுகளுக்கும் நோ சொல்ல வேண்டும்.
உடல் எடை: சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகளில் ஒன்று, உடல் எடை குறைதல். எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவு பெருமளவு குறையும் என்பதால், உடல் எடை வெகுவாக குறையும்.
இதய ஆரோக்கியம்: சர்க்கரை சேர்த்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு நோயின் அபாயம் பெரிதும் தவிர்க்கப்படும்.
எலும்பு ஆரோக்கியம்: எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது சர்க்கரை. எனவே சக்கரையை முற்றிலுமாக தவிர்ப்பதால், வலுவான எலும்புகள் கிடைக்கும் என்பதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்களை தவிர்க்கலாம்.
கல்லீரல் ஆரோக்கியம்: சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மிக முக்கியமாக கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் சர்க்கரை நிறுத்தினால், கல்லீரல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு விடும்.
சரும ஆரோக்கியம்: சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பதால், உடலில் சேரும் நச்சுக்கள் நீங்கி, சருமம் பளபளப்பாக இருக்கும். எனவே முதுமை வராமல் தடுக்க, சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
சர்க்கரை இல்லாத டயட்டை தொடங்கும் போது, சர்க்கரையை முழுமையாக நிறுத்துவதற்கு பதிலாக, படிப்படியாக சர்க்கரையின் அளவை குறைப்பதால், உடலில் ஏற்படும் திடீர் சோர்வு பலவீனத்தை தவிர்க்கலாம். ஒரு நாளைக்கு 5 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் உட்கொள்ளக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.