மன அழுத்தம் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் ஜாதிக்காய்!

Fri, 14 Jul 2023-10:26 pm,

ஜாதிக்காய் ஒரு சக்திவாய்ந்த மூலிகை, இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இதில் நீரிழிவு முதல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஜாதிக்காய் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். இது கணையத்தின் வேலையை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.

ஜாதிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. டிஎன்ஏ மற்றும் செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை நீக்குகிறது. அதனால் தான் ஜாதிக்காயை உட்கொள்வதால் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து  நம்மை காத்து, ஆபத்தான பாக்டீரியாக்களை அழிக்கும்.

அதிக கொழுப்பு, அதிக ட்ரைகிளிசரைடு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் ஜாதிக்காய் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 

 

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும் மூலிகையாகும். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தி, உங்களை மனச்சோர்விலிருந்து விலக்கி வைக்கிறது.உங்களின் சிந்தனைத் திறனையும் அதிகரிக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link