இந்தியாவில் Samsung Galaxy A21s போனின் விலைக் குறைப்பு; இப்போ விலை எவ்வளவு?
முந்தைய விலைக் குறைப்புக்குப் பிறகு, சாம்சங் கேலக்ஸி A21s 4 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்ட் ரூ.14,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,499 ஆகவும் இருந்தது.
சாம்சங் கேலக்ஸி A21s 720 × 1600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்ட 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த தொலைபேசி 2GHz ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.
இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வகைகளில் வருகிறது. சேமிப்பக விரிவாக்கத்திற்கு 512 ஜிபி வரை பிரத்யேக மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டும் உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி A21s 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச்-ஹோல் பகுதியில் 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி A21s 5,000 mAh பேட்டரி உடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக்அப் எடுக்கப்படுகின்றது. மென்பொருள் முன்னணியில், சாம்சங் கேலக்ஸி A21s ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் UI 2.0 உடன் இயங்குகின்றது.