அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான LIK படத்தின் முதல் பாடல்!

Wed, 16 Oct 2024-9:11 pm,

அனிருத் பிறந்தநாளையொட்டி அவரின் புதிய படத்தின் பாடலை இணையத்தில் வெளியிட்டு அனிருத்திற்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் விருந்து அளித்தது சோனி மியூசிக். மேலும் பல்வேறுத் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

லவ் இன்ஸ்ரூரன்ஸ் கம்பெனி படத்தின் பாடல் வெளியான சில நிமிடங்களிலே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

அனிருத் அனைவருக்கும் செல்ல பிள்ளை மற்றும் அனைவருக்கும் பிடித்த சுட்டி குழந்தை என்றே சொல்லலாம்.

சோனி மியூசிக் வெளியிட்ட  தீமா பாடல் ரசிகர்களை கவர்ந்து கவர்ந்துவருகிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதற்கு முன்பாக பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே படம் உலகளவில் ஹிட் ஆனதால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாயினர்.

அனிருத் ரசிகர்கள் தீமா பாடலுக்கு வைப் செய்து பாடலை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளத்தில் அனிருத்திற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறு வயதில் பாடலில் ஈடுபாடுகாட்டிய அனிருத் தற்போது ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை இசையமைத்து வருகிறார். அனிருத் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link