வயதானாலும் இளமையாக தெரிய வேண்டுமா? ‘இந்த’ 6 உணவுகளை சாப்பிடுங்கள்!
உடல்பகுதிகளில் நாம் அதிகமாக பராமரிக்கும் ஒரு பகுதி, சருமம். பலருக்கு இளம் வயதிலேயே வயதானது போன்ற தோற்றம் காணப்படும். சிலருக்கு வயதானாலும் சருமம் பார்க்க இளமையாக இருக்கும். இதற்கு காரணம் அவரவர் வாழ்வியல் சூழலாக இருக்கலாம். நாம், சருமத்தை இளமையாக பார்த்துக்கொள்ள சில உணவுகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
ஒமேகா 3 சத்துக்கள் நிரம்பிய சால்மன், டியூனா வகை மீன்களை ஃபேட்டி மீன்கள் என கூறுவர். இது, நம் சருமத்திற்கு இயற்கை மாய்ஸ்ட்ரைசராக செயல்படுகின்றன. இந்த மீனில், வைட்டமின் இ சத்துக்களும், சரும வெடிப்பை நீக்கும் சத்துக்களும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம் சருமத்திற்கு பல நன்மைகளை செய்யும் என்பது பலருக்கு தெரியாது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து சுருக்கத்தை தடுக்க உதவும் என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனர். இதை வேக வைத்துதான் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் முன்னர் மிளகு தடவினால் நல்லது.
டார்க் சாக்லேட்டுகலில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளன. இதை, சிறிதளவு நாம் எடுத்துக்கொள்வதனாலும் வயதாகும் தோற்றத்தை தவிர்க்க முடியும். 70 சதவிகிதம் கோகோ நிறைந்த டார்க் சாக்லேட்டுகளை மட்டுமே ஒரு நாளைக்கு சிறிதளவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நட்ஸ்களில் வைட்டமின் இ, மினரல் சத்துக்கள், ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் என பல வகையான நன்மைகள் நிறைந்துள்ளன. இதை இனிப்பு தின்பண்டங்களுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் ஒமேகா-3 சத்து, வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்க உதவும்.
ப்ரக்கோலியில் வைட்டமின் சி மற்றும் கே சத்துக்கள் அதிகமாக இருப்பதாக சில மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உங்கள் சருமம் மினுமினுக்க ப்ரக்கோலியை டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சத்து நிறைந்த, உணவுகளுள் ஒன்று அவகேடோ. இது, உங்கள் சருமம் வறட்சி அடையாமல் பளபளப்பாக இருக்க உதவும். இதை நீங்கள் சாலட் அல்லது புட்டிங் ஆகவும் செய்து சாப்பிடலாம்.