Egypt: வரலாற்றை திருத்தி எழுதும் எகிப்தின் புதிய தொல்லியல் கண்டுபிடிப்பு

Sun, 17 Jan 2021-11:16 pm,

சகாரா என்பது பண்டைய எகிப்திய தலைநகரான மெம்பிஸின் பரந்த இடுகாடு ஆகும், இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் (UNESCO World Heritage Site) ஆகும், இது ஒரு டஜன் பிரமிடுகள், பண்டைய மடங்கள் மற்றும் விலங்குகளை அடக்கம் செய்யும் இடங்கள் சகாரா என்றழைக்கப்படுகிறது.

(புகைப்படம்: AFP)

பண்டைய இராச்சியத்தின் ஆறாவது வம்சத்தின் மன்னர் முதல் பார்வோன் டெட்டி-இன் (King Teti) பிரமிடு-க்கு (pyramid) அருகே ஹவாஸ் (Hawass) தலைமையிலான குழு தொல்லியல் பணிகளை மேற்கொண்டது.

(புகைப்படம்: AFP)

புதிய ராஜ்ஜியம் (கிமு 16 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 11 ஆம் நூற்றாண்டு வரை) 50 க்கும் மேற்பட்ட மரப் பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஹவாஸ் தெரிவித்தார். "இந்த கண்டுபிடிப்பு சகாரா-வின் (Saqqara) வரலாற்றையும், குறிப்பாக 3,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய புதிய இராச்சியத்தின் வரலாற்றையும் மறுவரை செய்கிறது," என்று அவர் கூறினார்.

(புகைப்படம்: AFP)

வேறு என்ன கண்டுபிடிக்கப்பட்டது? ஹவாஸ் தனது குழு மொத்தம் 22 பெட்டிகளை கண்டுபிடித்ததாகக் கூறினார், அதில் ஒரு "சிப்பாய்" இருந்தார், அவருடைய போர்க் கருவியும் அருகில் இருந்தது". கல்லால் ஆன சர்கோபகஸ் (sarcophagus) எனப்படும் பூ வேலைகள் செதுக்கப்பட்ட பழங்கால கல்லால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டியும் கிடைத்தது.    அத்துடன் "இறந்தவர்களின் புத்தகத்தின் 17 வது அத்தியாயத்தைக் கொண்ட ஐந்து மீட்டர் நீளமுள்ள ஒரு பாப்பிரஸ் ... முகமூடிகள், மரப் படகுகள், பண்டைய எகிப்தியர்கள் விளையாடுவதற்குப் பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள் என பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன".

(புகைப்படம்: AFP)

 

இந்த கண்டுபிடிப்பு ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகம் "முக்கிய கண்டுபிடிப்புகள்" தொடர்பான அறிவிப்பை சனிக்கிழமையன்று  வெளியிட்டது. அந்த குறிப்பிட்ட இடத்தில், சமீபத்திய ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. "இது ஒரு அரிய மற்றும் புதிய கண்டுபிடிப்பு, ஏனென்றால் நாங்கள் கண்டறிந்த பெரும்பாலான கலைப்பொருட்கள் புதிய ராஜ்ஜியத்திற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவை, இது கிமு 500 க்கு முந்தையதாக இருக்கும்" என்று அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்ட குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.  

(புகைப்படம்: AFP)

பண்டைய கோவிலும் கண்டறியப்பட்டது "அரசர் டெட்டி-யின் (King Teti) மனைவியான மகாராணி நியாரிட் (Nearit) இறுதி சடங்கு கோயிலையும்" தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பண்டைய எகிப்தில் ஆரம்பகாலங்களில் கட்டப்பட்ட டிஜோசர் பிரமிட்டிற்கும் (pyramid of Djoser) இதற்கும் தொடர்பு உள்ளது.

(புகைப்படம்: AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link