Bird Flu சமயத்தில் முட்டை, சிக்கன் சாப்பிடலாமா? WHO என்ன சொல்கிறது?
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Avian Influenza Virus) பரவியிருக்கும் நிலையில் அசைவ உணவை விரும்பி உண்பவர்களின் மனதில் ஒரு பெரிய கேள்வி எழுப்பியுள்ளது. பறவைக் காய்ச்சலால் கொத்துக்கொத்தாக பறவைகள் இறக்கும் சூழ்நிலையில், பறவைகளின் முட்டை மற்றும் கோழி சாப்பிட பாதுகாப்பானதா?
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அண்மையில் மனிதர்களுக்கு ஆபத்தான தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல மாநிலங்கள் ஏற்கனவே பறவைக் காய்ச்சலின் எச்5என்8 (H5N8) வைரஸை கட்டுப்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன கேரளாவில் H5N8 வைரஸ் தாக்குதல் இருக்கும் நிலையில், அங்கு கோழிகளையும் வாத்துகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இறைச்சி பிரியர்களின் மனதில் ஒரு பெரிய கேள்வி எழுகிறது - முட்டை மற்றும் கோழி சாப்பிட பாதுகாப்பானதா? அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் தொற்று துரிதமாக பரவுவதை தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, மாநிலத்திற்குள் கண்காணிப்பை முடுக்கிவிட்டு, உடனடியாக வழிகாட்டு நெறிமுறைகளை அமைத்தன.
முட்டைகள், சிக்கன் பாதுகாப்பானதா?
கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 1,700 வாத்துகள் இறந்துள்ளன. ஹரியானாவில், கடந்த 10 நாட்களில் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் பறவைகளும் இறந்துள்ளன. மத்திய பிரதேசத்தில், இந்தூரில் இறந்த 155 காகங்களை பரிசோதித்தபோது, H5N8 பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர்தான் இந்தூரில் H5N8 நோய்க்கிருமி முதன்முதலில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில், ஜல்வர், கோட்டா மற்றும் பரனில் பறவைகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பறவை காய்ச்சல் அச்சங்கள் அதிகரித்திருக்கும்போது முட்டை மற்றும் கோழி சாப்பிட பாதுகாப்பானதா?
ராஜஸ்தானில், ஜல்வர், கோட்டா மற்றும் பரனில் பறவைகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கோழி (chicken), வாத்துகள் (ducks), வான்கோழிகள் (turkeys) மற்றும் கினி-கோழி (guinea-fowl) ஆகியவற்றை 70 ° செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பத்தில் சமைப்பது நல்லது. இதனால் எந்த இறைச்சியும் பச்சையாகவோ, சிவப்பு நிறமாகவும் இருக்காது, இது H5N1 வைரஸைக் கொல்லும் பாதுகாப்பான நடவடிக்கையாகும் என்று FAO / WHO அறிவுறுத்துகின்றன.
சமைக்காத முட்டை, கோழி உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட வேண்டாம்.
நோயால் பாதிக்கப்பட்ட மந்தைகளிலிருந்து எந்த பறவைகளும் உணவுச் சங்கிலியில் நுழையக்கூடாது. பறவைக் காய்ச்சல் உள்ள கோழிப்பண்ணை பகுதிகளில் வைரஸின் பரவலைக் குறைக்க நல்ல சுகாதார நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
நோயால் பாதிக்கப்பட்ட மந்தைகளிலிருந்து எந்த பறவைகளும் உணவுச் சங்கிலியில் நுழையக்கூடாது. கோழிப்பண்ணையில் (poultry) ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (avian influenza) பாதிப்பு இல்லாத பகுதிகளில், கோழி அல்லது பறவைகளின் பராமரிப்பு மற்றும் பண்ணை சார் பொருட்களை கையாள்பவர்களுக்கோ அல்லது உண்பவர்களுக்கோ எந்தவித அபாயமும் இல்லை.