29 பழங்காலப் பொருட்களை இந்தியாவிடம் திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு திரும்பிக் கிடைத்தன.
ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பிய பழங்கால பொருட்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்த பழங்கால பொருட்கள் வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவை. பழமையானவை கிபி 9-10 நூற்றாண்டுகளுக்கு முந்தையவை.
இந்த பழங்கால பொருட்களில் சிவன் மற்றும் நாயன்மார்கள், ஜெயின் பாரம்பரியம், சக்தி வழிபாடு, விஷ்ணு மற்றும் அவரது வடிவங்கள், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் ஆகியவை அடங்கும்
இந்த பழம்பொருட்கள் மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.