ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்...
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பலரும் உடற்பயிற்சி கூடங்களுக்கு தற்போது அதிகம் செல்கின்றனர். அதில் பயிற்சிபெற்ற நிபுணர்கள் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்கவோ, கூட்டவோ ஆலோசனைகள் வழங்கப்படும், அதற்கேற்ப உடற்பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படும்.
இருப்பினும், சிலர் உடற்பயிற்சி கூடம் குறித்த தெளிவான புரிதல் இன்றி சென்றுகொண்டிருப்பார்கள். அதனால், அது குறித்து விழிப்புணர்வது அவசியம். அந்த வகையில், உடற்பயிற்சி கூடத்தில், பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் தவிர்க்க வேண்டிய 5 உணவு வகைகள் தொடர்ந்து காணலாம்.
காரமான உணவுகள்: சூட்டை கிளப்பும் மற்றும் செரிமானத்தில் பிரச்னை வரும் காரமான உணவுகளை தவிர்க்கவும். இது உடல் வெப்பத்தை அதிகரித்து, அதிக வியர்வைக்கு வழி வகுக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: ஆரோக்கியமற்ற அதிக கொழுப்புள்ள, சர்க்கரை மற்றும் சோடியம் நிறைந்த சிப்ஸ், பிஸ்கட்கள், துரித உணவுகளை சாப்பிடக்கூடாது. இது வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி செரிமானக் கோளாறை உண்டாக்கும். இதனால், உடல்பயிற்சியே உங்களால் செய்ய முடியாது.
அதிக ஃபைபர் உள்ள உணவுகளை தவிர்க்கவும். ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஃபைபர் தேவையென்றாலும் இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது செரிமான பிரச்னை வரும். எனவே, பீன்ஸ், பருப்பு உள்ளிட்டவற்றையை தவிர்க்கவும்.
கார்பனேற்றப்பட்ட பானங்கள்: சோடா மற்றும் இனிப்பிலான பானங்களை குடிக்க வேண்டாம். இதனால் வாயு பிரச்னை வரும். மேலும், உடற்பயிற்சியிலும் ஈடுபட இயலாது.
வறுக்கப்பட்ட உணவுகள்: இதிலும் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் எக்கச்சக்கமாக உள்ளதால் இதுவும் செரிமான அமைப்பில் பிரச்னையை ஏற்படுத்தும். வயிறு நிரம்பியது போன்று உணரவைக்கும்.