உடல் எடையை உடனே குறைக்க இந்த தவறுகளை கண்டிப்பா பண்ணாதீங்க

Thu, 11 Apr 2024-11:37 am,

உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், இதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே இருக்கின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் இவற்றாலும் பெரிய அளவில் பலன் ஏதும் கிடைப்பதில்லை.

உடல் எடையை குறைக்க நாம் எடுக்கும் கூடுதல் முயற்சிகளுடன் நம் அன்றாட வாழ்வின் பழக்க வழக்கங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது தினசரி வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் நாம் செய்யும் சிறிய தவறுகள் உடல் பருமனில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். 

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நாம் செய்யக்கூடிய பல விஷயங்களுடன் செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன. இவற்றில் கவனம் செலுத்துவதும் மிக அவசியமாகும். உடல் பருமனை தவிர்க்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளை பற்றி இங்கெ காணலாம். 

காலை உணவு: சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவை சாப்பிடாமல் இருக்கிறார்கள். காலையில் எதையும் உட்கொள்ளாமல் இருந்தால் உடல் எடை குறையும் என நினைக்கிறார்கள். இது தவறான கருத்தாகும். உடல் எடையை குறைக்க நார்ச்சத்து அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவுகளை காலை உணவில் உட்கொண்டால் உடல் எடை குறையும், பருமனுக்கு நிவாரணம் கிடைக்கும்.

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்து வேளைகளிலும் சரியான உணவை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். நாம் உண்ணும் உணவில் போதுமான அளவு புரதச்சத்து, கார்போஹைட்ரேட்கள், இரும்புச்சத்து, வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை இருக்க வேண்டும். இதன் மூலம் நாம் டயட்டில் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும்

உடல் செயல்பாடு: இன்று இருக்கும் நவீன வாழ்க்கை முறையில் நம்மில் பலர் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுகிறோம். இதனால் உடல் பருமன் அதிகம் ஆகிறது. உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சி, யோகாசனம், நடைபயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். மேலும் ஒரே இடத்தில் அமராமல் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடப்பது கொழுப்பு சேர்வதை வெகுவாக குறைக்கும்.

போதுமான அளவு உறக்கம்: நமது தூக்கத்தின் அளவு குறைந்தால் உடல் பருமன் அதிகமாகும். தினமும் இரவில் 7 லிருந்து 8 மணி நேர உறக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லாததால் கார்டிசோன் என்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இவை மன அழுத்தத்தை அதிகரித்து உடல் எடையையும் அதிகரிக்கின்றன. 

அதிக சர்க்கரை: நமது உணவில் முடிந்தவரை சர்க்கரையையும், மாவு வகைகளையும் குறைப்பது நல்லது. இதனால் இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் ஆகியவை கட்டுக்குள் இருப்பதோடு உடல் எடையையும் நம்மால் கட்டுப்படுத்த முடிகின்றது.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link