ஆதார் கார்ட் இருந்தால் மட்டும் போதும்! ரூ. 5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு பெறலாம்!

Sun, 17 Nov 2024-7:16 pm,

அனைவருக்கும் சுகாதாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு வரம்பை அதிகப்படுத்தி உள்ளது.    

ஒரு குடும்பத்தின் வருமானத்தை பொருட்படுத்தாமல் 4.5 கோடிக்கு அதிகமான குடும்பங்களுக்கு சுகாதாரம் கிடைப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூபாய் 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீட்டில் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெற உள்ளனர்.

 

மூத்த குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைய ஆதார் கார்ட் மட்டும் இருந்தால் போதுமானது. NHA இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் இணைந்து அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம். இந்த அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு கவரேஜ் வழங்கப்படும்.

 

தனியார் உடல்நலக் காப்பீடு அல்லது வேறு ஏதேனும் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே இணைந்து இருந்தாலும், மூத்த குடிமக்கள் இந்த AB PM-JAY திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறத் தகுதியுடையவர்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link