கார் வாங்கும் கனவு நிஜமாகும்: இந்த வங்கிகளில் கிடைக்கிறது மிக மலிவான கடன் வசதி
கனரா வங்கி அனைத்து வங்கிகளையும் விட மலிவான செகண்ட் ஹேண்ட் கார் கடனை வழங்குகிறது பொதுத் துறை கனரா வங்கி வட்டி விகிதத்தின் அடிப்படையில் மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. இங்கு 7.30 சதவீத வட்டியில், செகண்ட் ஹேண்ட் காருக்கு ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கு பேங்க் ஆஃப் இந்தியா 7.45 சதவிகித வட்டியை வசூலிக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி செகண்ட் ஹேண்ட் கார் கடனை 8.30 சதவிகித வட்டியில் வழங்குகிறது. நீங்கள் இந்த கடனை எஸ்பிஐ-ல் பெற விரும்பினால், அதற்கு 9.20 சதவிகித வட்டி கட்ட வேண்டும்.
தனியார் வங்கிகளில், ஐசிஐசிஐ வங்கி மிகக் குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. செகண்ட் ஹேண்ட் காருக்கு, 12 சதவீத வட்டி விகிதத்தில், ஐந்து லட்சம் வரை இந்த வங்கி உங்களுக்கு கடன் வழங்குகிறது.
எச்டிஎப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி முறையே 13.75 சதவீதம் மற்றும் 14.55 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் அளிக்கின்றன.