இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தால் அதிக லாபம்!
எஸ்பிஐ வங்கி :
எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 2.70 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்பு உள்ள வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதம்ஆகும் .
ஹெச்டிஎஃப்சி வங்கி :
ஏப்ரல் 6, 2022 முதல் ஹெச்டிஎஃப்சி வங்கி சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை புதுப்பித்துள்ளது. 50 லட்சம் ரூபாய்க்குள் சேமிப்புக் கணக்கு இருப்புகளுக்கு 3.0 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி :
ஜூன் 4, 2020 முதல் ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான பயனுள்ள வட்டி விகிதத்தை புதுப்பித்துள்ளது. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதம் 3.00 சதவீதம் ஆகும், ரூ.50 லட்சம் மற்றும் மேல் உள்ள இருப்புகளுக்கு 3.50 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும்.
ஆக்சிஸ் வங்கி :
ஆக்சிஸ் வங்கியில், இப்போது 3 முதல் 3.5 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம் தினமும் கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும். ரூ.50 லட்சத்துக்கு கீழ் சேமிப்பு கணக்கு இருப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 3 சதவீதம் ஆகும். ரூ.50 லட்சம் முதல் ரூ.800 கோடிக்கு இடையே உள்ள இருப்புகளுக்கு வட்டி விகிதம் 3.50 சதவீதம்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி :
ரூ.10 லட்சத்துக்கு சேமிப்புக் கணக்கு இருப்புகளுக்கான வட்டி விகிதம் 4 சதவீதம், அதே சமயம் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.10 கோடி க்கு இடையேயான உறுப்புகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதம்.
தபால் அலுவலகம் :
தனிநபர் அல்லது கூட்டுக் கணக்குகளுக்கு 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குகளின் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுதோறும் 4.0 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் நிர்ணயித்த வட்டி விகிதத்தில் வட்டி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும்.