ஒல்லி பெல்லி வேண்டுமா? காலையில் இந்த டீடாக்ஸ் பானங்களை குடிங்க போதும்

Fri, 11 Oct 2024-6:33 pm,

நார்ச்சத்து அதிகமாக உள்ள வெள்ளரி உடலில் கூடுதல் கொழுப்பை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இதில் உள்ள பண்புகள் உடலுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றன. இதில் புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிக்கலாம்.

ஓமத்தில் நார்ச்சத்து மற்றும் பல வகையான தாதுக்கள் நிறைந்துள்ளன. இது நம் உடலை பல பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் நீரில் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து காலையில் இந்த நீரை சிறிது கொதிக்க வைத்து குடிக்கலாம். இது செரிமானத்தை சீராக்கி, தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவுகின்றது. 

 

மருத்துவ குணங்கள் நிறைந்த இலவங்கப்பட்டையை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி பல நோய்களில் இருந்தும் இது நம்மை காக்கிறது. பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இலவங்கப்பட்டையை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். இதன் பிறகு, தண்ணீரை ஆறவைத்து அதில் தேன் கலந்து குடிக்கவும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் துளசி நீரில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. இந்த பானத்தை செய்ய, ஒரு ஆரஞ்சு பழத்தின் துண்டுகள், ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் 6 துளசி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். அதன் பிறகு இந்த தண்ணீரை காலையில் குடிக்கலாம். இதன் மூலம் உடல் எடை வேகமாக குறையும்.

தொப்பை கொழுப்பைக் (Bely Fat) குறைப்பதில் குருதிநெல்லி சிறப்பாக செயல்படும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கலோரிகளை எரித்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

15 முதல் 20 கறிவேப்பிலையை எடுத்து முதலில் நன்கு கழுவிக்கொள்ளவும். இவற்றுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து குடிக்கவும். காலை வேளையில் மட்ட்டுமல்லாமல், ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் இதை குடிக்கலாம்.  நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் இதை குடிக்கலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் குடிக்கவும். இதன் மூலம் உங்கள் உடல் பருமன் பிரச்சனை குறைய ஆரம்பிக்கும்.

கல் உப்பில் பல வகையான தாதுக்கள் உள்ளன. இது செரிமான பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர உணவு சமைக்கும் போது கல் உப்பை பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். இது எடை இழப்பிலும் தொப்பை கொழுப்பை கரைப்பதிலும் பெரிய அளவில் உதவும்.

இந்த பானத்தை செய்ய, அரை எலுமிச்சை, ஒரு அங்குலம் நறுக்கிய இஞ்சி மற்றும் அரை பேரிக்காய் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி இவை அனைத்தையும் தண்ணீரில் 10 முதல் 12 மணி நேரம் ஊற வைக்கவும். பேரிக்காய் தண்ணீரில் கரையத் தொடங்குவதையும், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறுகள் தண்ணீரில் கரைவதையும் நீங்கள் காண்பீர்கள். இதை தினமும் காலையில் குடித்தால், உடல் பருமன், கொழுப்பு ஆகிய பிரச்சனைகளுக்க்கு தீர்வு கிடைக்கும்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சை சாறு கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link