ஸ்மார்ட்போன் வாங்கப்போறீங்களா? அக்டோபரில் அறிமுகம் ஆகவுள்ள அசத்தலான போன்கள் இதோ!!
ஒன்பிளஸின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் அக்டோபர் 15 அன்று வெளியிடப்படக்கூடும். இதைப் பற்றி அதிக தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. எனினும் இதன் அம்சங்கள் பற்றி பல விவரங்கள் கசிந்துள்ளன. குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டில் இயங்கும் இந்த போனில் 50 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி முன் கேமரா மற்றும் 8 ஜிபி ரேம் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த சாம்சங் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5G சேவைகள், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், IP68 சான்றிதழ் (நீர் எதிர்ப்பு) மற்றும் 6GB/8GB LPDDR5 RAM மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் வசதிகளுடன் வரும். கேமராவைப் பற்றி பேசுகையில், இதில் 12MP + 12MP பின்புற கேமரா மற்றும் 32MP முன் கேமரா ஆகியவை இருக்கக்கூடும்.
இந்த கூகுள் போன் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி/256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12, டூயல் சிம் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்களுடன் வரக்கூடும். Google Pixel 6 Pro, 6.71-இன்ச் கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே, 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி/256 ஜிபி/512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 உடன் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் FHD + OLED டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 மற்றும் 12GB LPDDR5 RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் வரும். இதில் நீங்கள் 108 எம்பி முதன்மை கேமரா மற்றும் 32 எம்பி முன் கேமராவைப் பெறுவீர்கள். இதில் 4,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
64 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா வசதிகளுடன் கூடிய இந்த போன் 5.9 இன்ச் எஃப்எச்டி + அமோல்ட் டிஸ்ப்ளே, 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 16 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் வரக்கூடும். இது ஒரு 5 ஜி ஸ்மார்ட்போனாகும்.
இந்த ஒப்போ போன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 50 எம்பி பின்புற கேமராக்கள், 16 எம்பி முன் கேமராக்கள் மற்றும் நான்-ரிமூவபிள் Li-Po 5,000mAh 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரக்கூடும்.
இந்த ரியல்மே போன் 6.62-இன்ச் முழு எச்டி+ 120Hz E4 + 120 அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரக்கூடும். இதில் நீங்கள் 64 எம்பி முதன்மை கேமரா மற்றும் 16 எம்பி முன் கேமராவைப் பெறலாம்.