ஆரோக்கியமாக வாழ யாருக்குத் தான் ஆசையில்லை? தவிர்க்க வேண்டிய ஆபத்தான உணவுகள்!
சில சமயங்களில் நாம் ஆரோக்கியமான உணவை உண்பதாக நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் நாம் உண்ணும் உணவு நூறு சதவீதம் ஆரோக்கியமானதாக இருக்காது. காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் முழுவதுமாக நீங்கியிருக்காது. அவற்றை நாம் சரியாக கழுவவில்லை என்றால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உலகின் எல்லாப் பகுதிகளிலும் மாசு விகிதம் மிக அதிகமாகிவிட்டதால், நாம் வாங்கி உண்ணும் உணவுகள் தொடர்பாக கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்
கடல் உணவு மிகவும் ஆரோக்கியமானது ஆனால் அவற்றில் பாதரசம் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாதரசம் ஒரு ஆபத்தான நச்சு என்பதால், அதை அதிக அளவு உட்கொண்டால், மூளை மற்றும் நரம்புகள் சேதமடையும்
இந்த நச்சுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உலோக கேன்களிலும் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியமானவை இல்லை என்பதுடன் நமது ஹார்மோன் ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம்.
கோழிக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பிற சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கப்பட்டு அவை பெரிதாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படும். பிராய்லர் கோழி இறைச்சியை உதாரணமாக சொல்லலாம். அந்தக் கோழியில் இருக்கும் நச்சுகள் வயிற்றில் தொற்று மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்கவும்.
கார்ன் சிரப் ஆரோக்கியத்திற்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக இருக்கும் சோளக்கருதின் சிரப், உடல் பருமன், கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை அதிகரிக்கும். இந்த சிரப் பல பேக்கேஜ் உணவுகளில் காணப்படுகிறது, எனவே எதை வாங்குகிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.
டிரான்ஸ் கொழுப்பு மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படுகிறது. கொலஸ்ட்ரால், இதய நோய்கள், பக்கவாதம், உடல் பருமன் போன்ற நோய்களை டிரான்ஸ் கொழுப்பு உருவாக்கிவிடும்
அதிக அளவிலான சோடியம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சோடியம் குறைந்தாலும் பிரச்சனை தான், அதிகரித்தாலும் பிரச்சனை தான். எனவே சோடியம் அளவை அளவாக பராமரிக்க வேண்டும்.
காய்கறிகள் நீண்ட நாளுக்கு பிறகும் வாடாமல், அன்று பறித்ததுபோலவே இருக்க வேண்டும் எனப்தற்காக இராசாயனங்கள் செலுத்தப்படுகின்றன. எனவே, காய்கறிகளை எங்கு வாங்குகிறோம் என்பதிலும் கவனமாக இருக்கவும்
பொறுப்பு துறப்பு: இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை