கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி... மற்றவர்களுக்கு கஷ்ட காலம் - இந்த 4 ராசிகளுக்கு மட்டும் ஜாக்பாட்!
தற்போது கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ள செவ்வாய் கிரகம் (Mars Transit) வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதிவரை அங்கேயேதான் இருக்கும். தற்போது சனியும் கடகத்தில்தான் இருக்கிறது.
செவ்வாய் - சனி இரண்டாலும் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். இந்த ஷடாஷ்டக் யோகம் (Shadashtak Yog) பலரின் வாழ்வில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும், மாற்றங்களை ஏற்படுத்தும்.
பெரும்பாலும் இந்த யோகம் அசுபமாக கருதப்பட்டாலும், இந்த நான்கு ராசிக்காரர்கள் மட்டும் ஷடாஷ்டக் யோகத்தால் பலன் அடைய உள்ளார்கள் அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
ரிஷபம்: இந்த யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு (Taurus) தைரியமும், வீரமும் அதிகரிக்கும். இதனால் எந்த பணியையும் நீங்கள் துணிவோடு எடுத்துக்கொண்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு இதனால் கூடுதல் நன்மை வரும். நினைத்த பதவியும் கிடைக்கும், அதனால் பணமும் கொட்டும். அதாவது, வாழ்வில் வரும் சவால்கள் தைரியமாக எதிர்கொண்டு நீங்கள் அதில் வெற்றியை ருசிப்பீர்கள்.
மிதுனம்: தற்போது செவ்வாய் மிதுனத்தில் (Gemini) இருந்துதான் கடகத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கும் நல்ல காலம் பிறந்துள்ளது. உங்களின் பணிகள் அனைத்தும் பாராட்டுக்கு உள்ளாகும், மதிப்பும் அதிகரிக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கும் இது நல்ல காலத்தை உண்டாக்கும், திருமண உறவும் பலமாகும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு (Libra) இது அற்புதமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். பணியில் பெரிய உச்சத்தை அடைவீர்கள். உங்களின் முதலாளி உங்கள் பணியால் மகிழ்ச்சியில் திழைத்துப்போவார்.
கும்பம்: செவ்வாய் பெய்ர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கும் (Aquarius) நன்மையை தர உள்ளது. பணியிலும், வியாபாரத்திலும் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். புது வேலையை அல்லது புது வியாபாரத்தை தொடங்க இது உகந்த நேரமாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு: வாசகர்களே, இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொது நம்பிக்கைகளின் அடிப்படையிலும், தகவல்களின் அடிப்படையிலும் எழுதப்பட்ட கணிப்புகள் ஆகும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.