கடைசி வாய்ப்பை கெட்டியாய் பிடித்த கில்... இனி இந்த வீரருக்குதான் பெரிய பிரச்னை!

Sun, 04 Feb 2024-8:44 pm,

இந்தியா - இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி (Team England) 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

 

தொடரின் இரண்டாவது போட்டி (IND vs ENG 2nd Test) கடந்த பிப். 2ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. போட்டி நாளையுடன் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி (Team India) ஏற்கெனவே, 143 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதிலும் சுப்மான் கில் சதமடித்து அசத்த 399 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

 

இதில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 14 ஓவர்கள் வரை பிடித்த இங்கிலாந்து 67 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது. டக்கெட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 

 

ஸாக் கிராலி 29 ரன்களுடனும், நைட் வாட்ச்மேனாக (!?) வந்த ரெஹான் அகமது 9 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு 332 எடுத்தால் வெற்றி என்ற நிலையிலும், இந்தியாவுக்கு 9 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையிலும் போட்டி உள்ளது. 

 

அந்த வகையில், கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக சுப்மான் கில் (Shubman Gill) மிக மிக சுமாராக விளையாடி வந்த நிலையில், இன்றைய போட்டியில் நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஷாட்களை விளையாடி சுப்மான் கில் சதமடித்தது நிச்சயம் மேலிடத்திற்கு பிடித்திற்கும். 

 

எனவே, இவர் மிடில் ஆர்டரில் நிச்சயம் இடம்பெறுவார் எனலாம். கேஎல் ராகுல் (KL Rahul), விராட் கோலி (Virat Kohli) அடுத்தடுத்து அணிக்குள் நுழையும்போது ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) வெளியேற்றப்படுவார் எனலாம். ஒருவேளை ரஜத் பட்டிதருக்கு பதில் ஒருவர் என்றாலும் அது சர்ஃபராஸ் கானாகவே இருக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் சிறிது காலம் வெளியே அமரவைக்கப்படலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link