நவம்பர் முழுவதும் ஜாக்பாட் தான்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகும் டபுள் நன்மைகள்

Fri, 01 Nov 2024-5:21 pm,

நவம்பர் மாதத்தில்தான் சனி அதன் சுழற்சியை மாற்ற இருக்கிறது. அதே நேரத்தில் சுக்கிரனும் தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இது பரிவர்தன் ராஜயோகத்தை உண்டாக்கும். அதேபோல், சூரியனும் விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடைகிறது. இவை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

 

இதனால், நவம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலாக இருந்தாலும் சரி, தனியாக வேலை பார்த்தாலும் சரி சிறப்பாக நாள்கள் காத்திருக்கின்றன. தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக இருக்கும். அந்த 5 ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

 

ரிஷபம்: இந்த நவம்பர் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலக ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாகவும் சிறப்பானதாக இருக்கும். வேலையில் புது புது வாய்ப்புகள் திறக்கும். நீங்கள் நினைத்த பதவியும், பணமும் வரும். காதலிப்பவர்கள் திருமணத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வருங்காலத்தில் உங்களுக்கு அதிக நன்மைகளை தரப்போகிறவரை இந்த மாதத்தில்தான் சந்திப்பீர்கள்.

 

கடகம்: இந்த ராசிக்காரர்களின் வாழ்வின் பல்வேறு விஷயங்களில் இந்த மாதம் சிறப்பான ஒன்றாக இருக்கும். புதிதாக வேலைத்தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு அவர் நினைத்த வேலையே கிடைக்கும். உங்களின் திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை சரியாகும். 

 

சிம்மம்: இந்த மாதம் செல்ல செல்லதான் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மையும் அதிகரிக்கும். மாதக் கடைசியில் நீங்கள் நினைத்த பெரிய காரியங்கள் நிறைவேறும். தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மன அமைதி நீடிக்கும். கல்வியில் மாணவர்கள் வெற்றியடைவார்கள். காதல் வாழக்கையில் இணையருடனான உறவு வலுபெறும். 

 

மகரம்: நீங்கள் நினைத்த பல விஷயங்கள் இந்த நவம்பர் மாதத்தில் நிறைவேறும். நீங்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் முக்கிய கவனத்தை பெறுவீர்கள். இதனால் பணம் சார்ந்த நன்மைகள் கிடைக்கும். சமூக வாழ்வில் ஈடுபாடு அதிகரிக்கும். காதல் வாழ்வும் சிறப்பாக இருக்கும். 

 

கும்பம்: இந்த மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். வேலையிலும், கௌரவத்திலும், பணத்திலும் என பல விஷயங்களில் உங்களுக்கு உயர்வு இருக்கும். நீங்கள் தேடி வந்த வேலை உங்கள் கை மேல் வந்துவிழும். முதலீடுகளில் நல்ல வருமானம் வரும். 

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதற்கு ஜீ நியூஸ் Zee Tamil News பொறுப்பேற்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link