சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், ஓஹோன்னு வாழ்க்கை!!
சனி வக்ர பெயர்ச்சி: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இவரது அருள் இருந்தால் நாம் வாழ்வில் அனைத்து இன்னல்களையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.
சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி தொழிலில் அதிக நிறைய நன்மைகளைத் தரும். உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைத்தால் சனி பகவான் கண்டிப்பாக தனது ஆசிகளை பொழிவார்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும். இந்த யோகத்தால், உங்களின் பொருளாதார நிலை வலுப்பெறுவதோடு, தொழில், வியாபாரத்திலும் பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும், குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல பொழுதை செலவிடுவீர்கள்.
சிம்மம்: சனியின் வக்ர நிலை சிம்ம ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜயோகத்தை உருவாக்கும். இந்த யோகத்தின் சுப பலன்களால் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவடையும். அனைத்து பணிகளிலும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மிதுனம்: சனியின் வக்ர பெயர்ச்சியால் உங்களது அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். இந்த நேரத்தில், நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நினைத்த வேலை தற்போது நடக்கும்.
மகரம்: சனியின் வக்ர பெயர்ச்சியால் பல்வேறு வழிகளில் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவீர்கள். இதனுடன், வணிகத்தில் ஒரு புதிய மற்றும் இலாபகரமான ஒப்பந்தத்தை இந்த காலகட்டத்தில் உறுதிப்படுத்துவீர்கள். அனைத்து வேலைகளிலும் சனி பகவானின் பரிபூரணமான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அதன் காரணமாக உங்கள் அனைத்து பணிகளும் வெற்றியடையும்.
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் அதே வேளையில், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சவாலாக இருக்கும்.
இந்த ராசிகள் ஜாக்கிரதை: கடகம், கும்பம், துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி பகவானை மகிழ்விக்க தினமும் கோளறு பதிகம், சனி சாலிசா ஆகியவற்றை பாராயணம் செய்வது நல்லது.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.