Bigg Boss Tamil: வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்த தினேஷ்! யார் இவர்?

Tue, 31 Oct 2023-1:20 pm,

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ் 7 இந்த ஆண்டும் சுவாரஸ்யம் குறையாமல் நடைபெற்று வருகிறது. 

 

பிக்பாஸ் தமிழ் 7 நான்கு வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்று உள்ளனர்.  அவர்களில் ஒருவராக தினேஷ் கோபால்சாமியும் சென்றுள்ளார்.

 

தினேஷ் பிரபலமான சீரியல் நடிகர். மஹான் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். இருப்பினும், பூவே பூச்சூடவா மற்றும் நாச்சியார்புரம் ஆகியவற்றின் மூலம் புகழ் பெற்றார். 

 

அவர் ரசிதா மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் சிறிது காலம் பிரிந்துள்ளனர். ரசிதா இவரின் மீது புகார் அளித்துள்ளார்.

 

ரசிதா மகாலட்சுமி கடந்த சீசனில் ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிதாக வீட்டிற்குள் நுழைந்த 5 பேரையும் இந்த வார கேப்டன் பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியுள்ளதால் இந்த வார போட்டி சுவாரஸ்யமாக உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link