Biggboss 6 Tamil: ’ஜிபி முத்து தான் ஜெயிப்பார்’ ரசிகர்களின் அட்ராசிட்டி

Sun, 09 Oct 2022-8:45 am,

யூ டியூப் மற்றும் டிக்டாக், இன்ஸ்டாகிராமில் வைரலாக இருப்பவர் ஜிபி முத்து. கொரோனா காலத்தில் வீட்டில் வேலையில்லாமல் இருந்தபோது பொழுது போக்கிற்காக பாடல் பாடி, அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

 

அவரின் பதிவுக்கு இணையத்தில் நாளுக்கு நாள் அமோக வரவேற்பு கிடைத்து தமிழகத்தின் யூ டியூப் ஸ்டாராக வளர்ந்தார்.

 

பிளாக்ஷீப் உள்ளிட்ட யூ டியூப் நிறுவனங்கள் அவருக்கு விருது கொடுத்தும் கவரவித்துள்ளனர். கடந்த ஆண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.

 

ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தமுறை முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டார்.

 

அவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிய ரசிகர்கள், ஜிபி முத்துவின் விளையாட்டு எப்படி இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

 

ஜிபி முத்து எப்படி விளையாடினாலும் அவரை வெற்றி வைப்பது மட்டுமே எங்களுடைய இலக்கு என கங்கணம் கட்டிக் கொண்டு தயாராக இருக்கின்றனர். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link