IND vs ENG: இந்திய அணியின் முன் இருக்கும் இந்த 3 கேள்விகள்... விடை கிடைக்குமா?

Thu, 26 Oct 2023-6:22 pm,

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

 

இன்னும், இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோத உள்ளது. 

அரையிறுதிக்கு இந்திய அணி ஏறத்தாழ தகுதிபெற்றுவிட்டது என்று கூறலாம். இருப்பினும், ஹர்திக் பாண்டியாவின் காயம் இந்திய அணி சில கேள்விகளை எழுப்பி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.

 

சூர்யகுமாரா அல்லது இஷான் கிஷானா?: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவை சேர்க்கலாமா அல்லது இஷான் கிஷனை அணிக்குள் கொண்டு வரலாமா என்ற குழப்பம் இந்திய அணிக்கு இருக்கும். இஷான் கிஷானுக்கு மிடில் ஆர்டரில் சமீபத்தில் சற்று அனுபவம் இருந்தாலும், சூர்யகுமாருக்கு ரோஹித் & டிராவிட் கூட்டணி மற்றொரு வாய்ப்பை அளிக்கும் என தெரிகிறது. 

 

மூன்று பாஸ்ட் பௌலரா அல்லது 3 ஸ்பின்னரா?: தற்போது ஹர்திக் பாண்டியா இல்லை என்பதால் 5 பிரதான பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். இந்த அணியில் இந்தியா மூன்று பாஸ்ட் பௌலர், 2 ஸ்பின்னர் அல்லது 3 ஸ்பின்னர், 2 பாஸ்ட் பௌலர் என்ற காம்பினேஷனில் எதை தேர்வு செய்யும் என்ற குழப்பம் இருக்கும். இது ஆடுகளம் மற்றும் சூழல் சார்ந்தே முடிவாக வாய்ப்புள்ளது. 

 

அஸ்வின் வந்தால் யார் வெளியே?:  ஒருவேளை மூன்று ஸ்பின்னர் வேண்டும் என இந்திய அணி முடிவெடுத்தால் சிராஜ் அல்லது ஷமி இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். பும்ராவை தூக்குவது சாத்தியமில்லாதது என்பதால் சிராஜ் மற்றும் ஷமி ஆகியோரில் ஒருவரைதான் வெளியேற்ற முடியும். கடந்த போட்டியில் ஷமி சிறப்பாக விளையாடி உள்ளார், சிராஜ் கடந்த ஓராண்டாக இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி உலகின் நம்பர் 1 வேகப்பந்துவீச்சாளராகவும் உள்ளார். இதில் யாரை இந்திய அணி தேர்வு செய்யும் என்பதே பெரிய கேள்வி. 

 

இந்த கேள்விகளுக்கு விடை என்பது அடுத்தடுத்த போட்டிகளில்தான் தெரியும் என்றாலும் அணியின் சமநிலை எந்த நிலையிலும் தவறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link