Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

Tue, 23 Jul 2024-3:55 pm,

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகள் வெளிவராமல் ஏமாற்றங்களும் இருக்கின்றன. 

 

சாமானியர்களுக்கு பெரிய நிவாரணமாக ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் அளவை நிதி அமைச்சர் 50,0000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தியுள்ளார். மேலும், புதிய வரி முறையின் கீழான வரி அடுக்குகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது முதலாளி / நிறுவனத்தின் என்பிஎஸ் பங்களிப்பை 14 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை இது 10 சதவீதமாக இருந்தது.

இந்த மாற்றம் காரணமாக ஊழியர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் அதிக பலன்கள் கிடைக்கும். மேலும், ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளம் அதாவது டேக் ஹோம் சேலரியிலும் இதனால் மாற்றம் ஏற்படும். 

முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பை 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவின் மூலம் ஓய்வூதிய நிதியை சேர்க்க, என்பிஎஸ்-ஐ  ஏற்றுக்கொள்ளும் திசையில் சம்பள வர்க்கத்தினர் ஊக்குவிக்கப்படுவார்கள். இதேபோல், தனியார் துறை, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் புதிய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களின் வருமானத்தில் இருந்து 14 சதவீதம் வரை சம்பளம் பிடித்தம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

NPS சந்தை இணைக்கப்பட்ட திட்டமாகும். தற்போது இது ஒரு மிகப் பிரபலமான ஓய்வூதிய திட்டமாக உள்ளது. முன்னர், அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டது. எனினும், 2009 முதல், தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்தியது. 

NPS -இல் இரண்டு வகையான கணக்குகளைத் திறக்கலாம். முதல் வகை NPS டயர் 1 ஒரு ஓய்வூதியக் கணக்காகும். டயர் 2 ஒரு வாலண்டரி அதாவது தன்னார்வக் கணக்காகும். 

NPS திட்டத்தில் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவிகிதம் ஊழியர் தரப்பிலிருந்தும், 14 சதவிகிதம் அரசாங்கத்தின்  தரப்பிலிருந்தும் பங்களிக்கப்படுகிறது. முதிர்வுக்குப் பிறகு, கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகையில், ஊழியர்கள் 60 சதவிகிதம் வரை திரும்பப் பெறலாம். மீதமுள்ள 40 சதவிகிதத்தை ஓய்வூதியத்துக்கான ஆனுவிட்டியை வாங்க வாங்க செலவிடலாம். தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS இல் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம், 1961 இன் மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும். 

மக்களுக்கு ஓய்வூதிய வருமானத்தை வழங்குவதற்காக அரசு என்பிஎஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகின்றது. இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் அரசு சாரா துறைகளிலிருந்து NPS -இல் 947,000 புதிய சந்தாதாரர்களை சேர்ந்துள்ளார்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link