Budget 2024: இந்த துறைகளில் முக்கிய கவனம் இருக்கும், அதிக அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்

Sun, 30 Jun 2024-8:58 am,

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலையில் தாக்கல் செய்யவிருக்கும் முழு பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள பொது மக்களுடன் சந்தை முதலீட்டாளர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஜூலை மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தை தேர்தல்களுக்குப் பிறகு ஒரு நேர்மறையான போக்கை பராமரித்து வருவதாகவும், ஒவ்வொரு வாரமும் படிப்படியாக உயர்ந்து வருவதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர். வெள்ளியன்று, அதிக அளவில் ப்ராஃபிட் புக்கிங் இருந்தது இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் ஒருமுறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, ஜூன் 28 வெள்ளியன்று இழப்புகளுடன் முடிவடைந்தது. இது அவற்றின் நான்கு நாள் வெற்றிப் பயணத்தை முறியடித்தது.

உலகச் சந்தையில் இருந்து கலவையான சமிக்ஞைகள் இருந்தபோதிலும், குறிப்பாக பணவீக்கக் கவலைகள் தொடர்பாக இந்திய அளவுகோல் குறியீடுகள் இந்த வாரம் லாபத்தைப் பதிவு செய்தன. முதலீட்டாளர்களின் கவனம் முக்கியமாக பெரிய பங்குகளில் இருந்தது, இதன் விளைவாக நடுத்தர மற்றும் சிறிய பிரிவுகளின் செயல்திறன் குறைவாக இருந்தது. வங்கிப் பிரிவில் பொதுத்துறை வங்கிகளை விட சிறப்பாக செயல்பட்ட தனியார் வங்கிகளுடன் இணைந்து தகவல் தொழில்நுட்பத் துறை குறிப்பிடத்தக்க மீட்சியைக் காட்டியது. பட்ஜெட் வரை பங்குச்சந்தையின் போக்கு சாதகமாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

பட்ஜெட்டுக்கு முன்னதாக, உள்கட்டமைப்பு முதலீடு, போக்குவரத்து நெட்வொர்க்குகளை நவீனமயமாக்குவது, சுற்றுச்சூழல் விளைவுகளை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, நிலைத்தன்மையில் கவனம் செலுத்தப்படும் என துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். 

எரிசக்தி கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களுக்கு முக்கியத்துவம், உலகளாவிய நிலைப்புத்தன்மை இலக்குகளுடன் ஒத்திசைந்து இருப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறைகளில் உலக அளவில் இந்தியாவை முன்னோடியாக்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

பாதுகாப்புத் துறை மற்றும் ரயில்வே தூறையிலும் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, சமீபத்தில் நடந்துள்ள ரயில் விபத்துகளை கருத்தில் கொண்டு ரயில் பயண பாதுகாப்புக்கான சில முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்படலாம் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த பட்ஜெட்டில், மலிவு விலை வீடுகள், மூலதனச் செலவு, நுகர்வோர் பொருட்கள் மற்றும் விகித உணர்திறன் சார்ந்த துறைகள் உட்பட பல உள்நாட்டுத் துறைகளை சாதகமாக பாதிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கிறது. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஃபார்மா ஆகிய தூறைகளில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் எதிர்பார்க்கபப்டவில்லை என்றும் கூறப்படுகின்றது. 

இவற்றை தவிர, நடுத்த மக்களை மகிழ்விக்கும் வகையில், வரி விலக்கு, வரி அடுக்குகளில் மாற்றம், மானியங்கள், பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள், முதியோருக்கான சிறப்பு திட்டங்கள், மருத்துவ காப்பீடுகளில் சாதகமான அறிவிப்புகள் என இப்படி இந்த பட்ஜெட்டில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link